'கஜா’வை துல்லியமாக கணித்த பள்ளி ஆசிரியர்- பல்வேறு தரப்பினரிடம் இருந்து குவியும் பாராட்டுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2018

'கஜா’வை துல்லியமாக கணித்த பள்ளி ஆசிரியர்- பல்வேறு தரப்பினரிடம் இருந்து குவியும் பாராட்டுகள்



கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்று 15 நாட்களுக்கு முன்பே அரசுப் பள்ளி ஆசிரியர் ந.செல்வகுமார் துல்லியமாக கணித்து கூறிவந்தார். அதேபோல் புயல் பயணிக்கும் பாதை மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்தும் கடந்த 4 நாட்களாக அவர் எச்சரித்து வந்தார். அவரது கணிப்புகள் பெருமளவில் இப் போது உண்மையாகி உள்ளன. அதனால் அவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மன்னார்குடியை சேர்ந்தவர் ந.செல்வகுமார். அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வ அடிப்படையில் வானி லையை கணித்து கூறி வருகிறார். இவர் 15 நாட்களுக்கு முன்பே இந்த புயலை கணித்ததுடன், அது வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்பதை உறுதிபட தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம், தொடக்கத்தில் கடலூர் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும், புயல் வலு குறைந்து கரையை கடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இது தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்பதில் செல்வகுமார் உறுதியாக இருந் தார். அவர் கணித்ததுபோலவே தற்போது நடந்திருப்பதால், அவ ருக்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.



 இதுதொடர்பாக வானிலை ஆர்வலர் ந.செல்வகுமார் கூறியது:
மாணவப் பருவத்திலிருந்தே, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியிடப்படும் வானிலை தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தை பார்ப்பது என் வழக்கம். அதன் பின்னர் விசா கப்பட்டினம் துறைமுகம் அருகே இறால் முட்டை பொறிப்பகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
அப்போது வானிலை தொடர் பான அறிவை வளர்த்துக் கொண்டு, அங்குள்ள மீனவர் களுக்கு வானிலை தொடர்பான தகவல்களை தெரிவித்து வந்தேன். 1996-ம் ஆண்டு நான் கணித்தபடியே மோசமான புயல் தாக்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீனவர் கள் என்னிடம் வானிலை நிலவரங் களை கேட்கத் தொடங்கினர்.



2000-ம் ஆண்டில் ஆசிரியர் வேலை கிடைத்து வலங்கைமான் பகுதிக்கு வந்தேன். அப்போது செல்போன் பிரபலமடைந்த நிலையில், அங்கு வானிலையை கணித்து எஸ்எம்எஸ் மூலமாக தெரிவித்து வந்தேன். எனது கணிப்பு சரியாக இருந்ததால், என் தகவலை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய கட்டுப்பாடுகளால், ஒரு சிம் கார்டில் இருந்து நாளொன்றுக்கு 100 பேருக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்ப முடியவில்லை.
அதனால் 30 சிம் கார்டுகளை வாங்கி, தலா 100 பேருக்கு வானிலை தொடர்பாக எஸ்எம்எஸ் அனுப்பி வந்தேன். பின்னர் அதற்கும் தடை வந்தது. தொடர்ந்து, 150 வாட்ஸ்ஆப் குழுக் களை உருவாக்கி வானிலை நில வரத்தை அறிவித்து வந்தேன். அத் தனை குழுக்களையும் நிர்வகிக்க முடியாமல் கைபேசி முடங்கியது. அதனால் தற்போது ‘நம்ம உழவன்’ என்ற செயலி மூலம் தெரிவித்து வருகிறேன்.
இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள விவரங்கள் அடிப்படையில்தான் நான் கணித்து வருகிறேன். இந்த முறை ஓமன் மற்றும் மேற்கு வங்கம் அருகே நிலவிய எதிர் புயல்களின் செயல்பாடுகளுடன் கஜா புயலை ஒப்பிட்டு பார்த்து, வேதாரண்யம் அருகேதான் புயல் கரையை கடக் கும் என்று உறுதியாக கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

22 comments:

  1. You are a genius sir.

    ReplyDelete
  2. தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா👍

    ReplyDelete
  3. தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா👍

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அறிவில் சிறந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  8. Congrats sir are you geography teacher

    ReplyDelete
  9. உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி