அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2018

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !



பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு இருக்கக்கூடாது என்பற்காக அவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும் என்ற முறையை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நடைமுறைப்படுத்தினார்.

இதன் மூலம் வகுப்பறைகளில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு இல்லாத சமநிலை உருவானது.இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிகளில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், கனிணி வகுப்புகள், ஆங்கில வழிக்கல்வி, தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் என அசத்தி வருகிறார்.இதனிடையே பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்தை ஆசிரியர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பள்ளிக்கு சீருடை அணிந்து வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது தனியார் பள்ளிகளில் இந்த முறை வழக்கத்தில் உள்ளது. அமைச்சர் செங்கோட்யைன் , அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளைவிட சிறப்பாகசெயல்பட வைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்குசீருடை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் தற்போது அரசுப் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளும் சீருடையுடன் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

9 comments:

  1. வரவேற்கிறேன்....

    ReplyDelete
  2. Uniform என்கிற பெயரில் வெள்ளை, மஞ்சள், ரோஸ் சட்டை கொடுக்காதீங்க.. நீலம் okay..

    ReplyDelete
  3. இவர் புதிதாக எதுவும் கொண்டு வர வில்லை. எல்லாம் போலியான விளம்பரம்.இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்றை புதியதாக புகுத்தியது போன்று மாயத்தோற்றத்தை அப்பாவி மக்களிடம் உருவாக்கலாம், ஆசிரியர்கள் அங்கம்வகிக்கும் இத்தலத்தில் போலியான விளம்பரங்களை குறைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  4. Instead of uniform fill permanently teacher post that's will change the students future...

    ReplyDelete
  5. Very good decision. I think all Teachers will accept this.

    ReplyDelete
  6. ஆசிரியர்கள் சீருடை போடாமல் இருப்பததால் தான் மாணவர்கள் படிக்கவில்லை.....
    முதலில் ஆசிரியர்களுக்கு அனைத்து உரிமைகளையும் கொடுங்கள்....
    ஒழுக்கத்தையும் படிப்பையும் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.....

    ReplyDelete
  7. Pass Panna engalukku eppa sir posting poduveenga? Daily media, daily athiradi arivippu, we r pavam

    ReplyDelete
    Replies
    1. minister announce only viraivil......he knows only ...namma kuda padichvan avan good time
      got job..avan genius mathri feel panran...nammala partha uneducated mathri feel panran...what a world.ella viraivil mudivukku varum

      Delete
  8. ajith padathula solra mari kannadi tiruppuna vandi oodum,adhu madhiri teachers uniform change panna students padippangala..........vaccancny fill pannathaan students padippanga....idhuthan minister changeoooooo.....saree..pant..blouse...nalla varum..
    kennnnnnnnna_________________.lot of schools tamil and english(science and social,maths and english) subject teaching one teacher...vaccant illannu oru news....yanna kolla adikka panam venum....sagum podhu one rupee koda no chance...........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி