ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு: தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2018

ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு: தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல்!



2012-ம் ஆண்டு அரசு நியமித்த கலை ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் அடிப்படையில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு விதிமுறைகளை மீறி தகுதி இல்லாதவர்களை பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் 8-ம் வகுப்பு வரை தையல், இசை உள்ளிட்ட கலை படங்களை கற்பிக்க 2012-ம் ஆண்டு அனைவர்க்கும் கல்வி இயக்கம் சார்பில் 16,546 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் 6 மாவட்டங்களில் 200 தகுதில்லாத கலை ஆசிரியர்கள் பகுதி நேர அடிப்படையில் தற்போது அரசுப்பள்ளிகளில் பணியாற்றிவருவதாக கலை ஆசிரியர்கள் கூறியுள்ளனர். 

13 comments:

  1. PG TRB தமிழ்
    Coatching centre..
    Contact : 9842138560

    ReplyDelete
  2. Tet,2017 poly trb omr wrong correction mathiri y 2017 pg trb la nadakama irukuma.... because both exam correction are worked at same scan center. So between la nadantha 2017 pg trb la nadakkama irunthrukuma....pls collect this information from RTI....

    ReplyDelete
    Replies
    1. Bro, cmcell petition போடுங்க. நிறைய பேர் petition போட்டால் நிச்சயம் rescan செய்வார்கள். OMR நகல் onlineல் விடுவார்கள்.

      Delete
    2. 100% PG TRB 2017 oolal nadanthirukka vaippundu2017-ill paniniyamanam petavarkalin OMR nagal vittal teriya varum oolal.

      Delete
  3. முறையான கல்வித்தகுதி இல்லாத வர்களை எப்படி தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கி னார்கள் இப்போது ஏழுண்டுகள் கழித்து தான் கண்டறியப்பட்டது என்பதை நினைக்கும் போது இந்த ஆட்சியாளர்கள் களின் ஊழல் எந்த அளவுக்கு இருந்து வருகிறது என்று ஒவ்வொரு படித்தவர்களும் சிந்திக்க வேண்டும்.அதே நிலைதான் இன்று சிரப்பாசிரியர் நியமனத்தில் அலுவளர்களின் ஊழல் தாண்டவமாடி வருவது வேதனைக்குறியது. ஒரு ஓவிய ஆசிரியர் பணிக்கு முரையான கல்வி தகுதிகளை வரையறை செய்து குறிப்பானை வெளியிடாமல்
    இன்று தேர்வு எழுதியவர்களை குழப்பி வரும் ஆசிரியர் தேர்வு வாரியம் குளறுபடிகள் செய்து வருகிறது வருகிறது.சிரப்பாசிரியர் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்டு சுமார் 1 1/2 வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறுவிதமான குளறுபடிகள் செய்து இதுவரை நிரப்பப்படாமல் இருந்து வருகிறது.இதையெல்லாம் யார் தட்டிக்கேட்க முடியும்.பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தினந்தோறும் ஒரு வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார் இந்த ஊழல் நிறைந்த ஆட்சி ஒழிந்தால் தான் படித்தவர்கள் நிலை மாறும் என்பதில் ஐயமில்லை.மேலும் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க யாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதோ அந்த அலுவளர்களையும் தன்டிக்க வேண்டும்.முறையான கல்வித் தகுதியில்லாதவர்களை எப்படி தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கினார்கள். கல்வித்துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது வேதனைக்குரியது.இப்போது இந்த சிறப்பாசிரியர் நியமனம் சிரிப்பாய் சிரிக்கிறது தமிழகம் தேர்வு எழுதியவர்கள் இன்று நீதி கேட்டு நீதிமன்றங்களுக்கு சென்று நீதி கேட்கும் அவல நிலையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்படுத்தி உள்ளது.

    ReplyDelete
  4. இவர்கள் ஏன் போஸ்ட்டிங் போடமாட்ராங்கன்னு
    இப்போது புரிகிறதா
    நண்பர்களே.
    எல்லாத்தையும்
    தகுதியற்றவர்களிடம்
    விற்றுவிட்டார்கள்.
    போஸ்டிங்கை
    பணம் அடித்தவர்களுக்கு
    போட்டாலும் சரி,
    கஸ்ட்ப்பட்டு படித்து
    தகுதி பெற்றவர்களுக்கு
    போட்டாலும் சரி
    நிச்சயம்
    ஒரு கூட்டு
    களவாணிகளே மாட்டுவார்கள்.
    எனவே ஆசிரியர்களுக்கு
    போஸ்ட்டிங் போட்டு மாட்டிக்கொள்ளும்
    ஆபத்தான முடிவை
    ஆட்சி மாறும் வரை மேற்கொள்ள
    மாட்டார்கள்.
    அது வரை நாம்
    இளவம் காய் பழுக்கும் என்று
    காத்திருக்கும் கிளியைப்போல
    தான்.

    ReplyDelete
  5. கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அன்றைய நாளில் இருந்த அரசியல் வாதிகளும் கல்வித்துறை அலுவலர் களும்... இன்றைய நிலையும் இதேதான்.

    ReplyDelete
  6. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அன்றைய அரசியல் வாதிகளும் அன்றைய கல்வித்துறை அலுவலர்களுமே! கலையாசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் அந்த சமயத்தில் ஏன் இதை சுட்டிக் காட்ட வில்லை.அப்போதும் தலைவராகத்தானே இருந்திருப்பார். இப்போது சிறப்பாசிரியர் நியமனத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு நின்று விடாமல் ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட முரையான கல்வித் தகுதி குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்களிடம் கலையாசிரியர் நல சங்கத்தின் மாநில தலைவர் என்ற முறையில் TRB யையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் நேரில் சென்று சிரப்பாசிரியர் நியமனம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் போல் அல்லாமல் முறையாக போட்டி தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக Reserved என்று நிறுத்தி வைக்த்துள்ள அனைத்து பணி இடங்களுக்கும் பெயர் பட்டியல் வெளியீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. தயவு செய்து தவறு செய்தவர்களை தண்டிக்க முன் வாருங்கள். தவறைச் சுட்டிக் காட்டும் அன்பு உள்ளங்களை திட்டாதீர்கள். உங்கள் வேலை வாய்ப்பு தள்ளிப்போக காரணம் தவறுகள் செய்தவர்களால் மட்டுமே.இவ்வாறு பதிவு செய்தால் உண்மையை வெளிபடுத்த ஒருவரும் முன்வரமாட்டார்கள்.வாய்மையே வெல்லும்.

    ReplyDelete
  8. Now special teacher recruitment 2012-2016 vacancy exam held on 2017...in this exam PSTM certificate given by fake....becoz government examination board has announced sewing,drawing and music higher grade course we cannot give PSTM examiners ....for this confusion 20% of candidates has given fake certificate ....will trb take precaution action before conduct the councelling....??????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி