பள்ளி அருகில் அங்கன்வாடி கணக்கெடுக்கும் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2018

பள்ளி அருகில் அங்கன்வாடி கணக்கெடுக்கும் கல்வித்துறை


அங்கன்வாடிகளை, பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, துவக்கப்பள்ளி அருகில் செயல்படும் அங்கன்வாடி மையம் குறித்து, தொடக்க கல்வித்துறை விபரம் சேகரிக்கிறது.

நடப்பு கல்வியாண்டு முதல், ஒற்றை இலக்க மாணவர்களை கொண்ட அங்கன்வாடி மையங்களை மூடி விட்டு, அங்கு படிக்கும் குழந்தைகளை, அருகில் உள்ள துவக்கப்பள்ளியில் சேர்க்க, அரசு ஆலோசித்து வருகிறது. 'இதை உறுதிப்படுத்த, அரசு துவக்கப்பள்ளிகளில், யு.கே.ஜி., எல்.கே.ஜி., பிரீ -கேஜி வகுப்பு துவக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும், துவக்கப்பள்ளியில் இருந்து, 2 - 4 கி.மீ.,க்குள் உள்ள அங்கன்வாடி மையம் குறித்த பட்டியல், தொடக்க கல்வித்துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி