பாட புத்தகம் கிடைக்காமல் போட்டி தேர்வர்கள் அவதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2018

பாட புத்தகம் கிடைக்காமல் போட்டி தேர்வர்கள் அவதி!


டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதும் தேர்வர்கள், தமிழக அரசின் பாட புத்தகங்கள் சரியாக கிடைக்காததால், அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 1, குரூப் - 2 மற்றும், குரூப் - 4 என, பல போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதே போல், யு.பி.எஸ்.சி., என்ற குடிமை பணிகள் சேவை ஆணையம் சார்பில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இவற்றில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் பெரும்பாலும், தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டப்படியே, வினாத்தாள் இடம் பெறுகிறது.

இதனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள், போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு, தமிழக பாடத்திட்ட புத்தகங்களை வாங்குகின்றனர். பெரும்பாலான இடங்களில்,பாட திட்ட புத்தகங்கள் கிடைக்காமல், தேர்வர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.பல மாவட்டங்களில், மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே, பாட திட்ட விற்பனை மையம் செயல்படுகிறது. இதனால், தேர்வர்கள், 50 கி.மீ.,க்கு மேல், பயணம் செய்து வந்தால், சில புத்தகங்கள் இருப்பு இல்லை என, விற்பனை மையத்தினர் கைவிரிக்கின்றனர். தேர்வர்கள் பல முறை அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சென்னையிலும், டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாலக வளாகத்தில் மட்டுமே, பாட புத்தகங்கள் விற்கப்படுகின்றன. தேர்வர்கள் அலைச்சல் இன்றி, ஆன்லைனில் வாங்கலாம் என, தமிழ்நாடு பாட நுால் கழக அதிகாரிகள் கூறினர்.பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிகள் மட்டுமே, ஆன்லைனில் வாங்கும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாறாக பொதுமக்களோ, பெற்றோரோ, தேர்வரோ பதிவு செய்து வாங்க, வசதிகள் செய்யப்படவில்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி