பள்ளி கட்டண கமிட்டிக்கு எட்டு மாதம் சம்பளம் பாக்கி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2018

பள்ளி கட்டண கமிட்டிக்கு எட்டு மாதம் சம்பளம் பாக்கி


சுயநிதி பள்ளிகளுக்கான, கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காததால், கட்டண கமிட்டியின் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக சுயநிதி பள்ளி கல்வி கட்டண கமிட்டி செயல்படுகிறது.தற்போது, இந்த கமிட்டி யின் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மாசிலாமணி செயல்படுகிறார்.

கட்டண கமிட்டி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கூடுதலாக, இணையதளம் மற்றும் கணினி இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கல்வி கட்டண கமிட்டி தலைவர், சிறப்பு அதிகாரி மற்றும் கணினி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளி கல்வி துறை வழியாக, பல முறை கடிதம் எழுதியும், நிதி துறையின் அலட்சியத்தால், சம்பளம் வழங்குவதில், சிக்கல் நீடிக்கிறது.இந்த நிலை தொடர்ந்தால், கட்டண கமிட்டி பணியை தொடர முடியாமல், அதன் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி