இனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2018

இனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, ஆசிரியர்களுக்கான குறைதீர் முகாம் நடத்தி, புகார்களை கேட்டறிய வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

கட்டாயம்பள்ளிக்கல்வித்துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணப்பலன் மற்றும் பதவி உயர்வில் முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாக மட்டத்திலே சீர் செய்துவிடலாம். இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால், நீதிமன்றத்தை நாடுவதே இறுதி தீர்வாகிவிட்டது.தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்பு வழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்கள் கேட்டறியவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.இதற்காக ஏற்கனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனி கட்டாயம் நடத்த வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.

அவசியம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:

ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி, பண பலன்கள் பெறுவதில், உள்ள சிரமங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும், மாதந்தோறும் முதல், சனிக்கிழமை, குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.இதில், பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து, இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இல்லாவிடிலும், தகவல் அளிப்பது அவசியம்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி