பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2018

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்!



அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக, நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் எஸ்.ஆர்.அரங்க நாதன் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள எம்சிசி பள்ளி யில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பங்கேற்று போட்டி களில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு களையும், சிறந்த நூலகர் களுக்கு விருதுகளையும் வழங் கினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை யன் பேசியதாவது:

மாணவர்களின் நலனுக்காக தமி ழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒவ் வொரு பள்ளியிலும் நவீன அறிவி யல் பரிசோதனைக் கூடம் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் வரும் டிசம் பருக்குள் 625 பள்ளிகளில் ஏற்படுத் தப்படும். மாணவர்கள் மேலைநாடு களில் உள்ள அறிவியல், கலாச் சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்வதற்காக ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை வௌிநாடுகளுக்கு அனுப்ப உள் ளோம்.

சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு செய்வதில் குளறுபடி வந்துள்ள தான புகாரையடுத்து, தமிழ் வழியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத் தில் பணியாற்றிய ஆசிரியர் கள், இத்தேர்வை எழுதிய விதவை ஆசிரியர்கள் ஆகியோருக்கு 4 வார கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று எங்களுக்கு அனுப்பி வைக்க உத் தரவிடப்பட்டுள்ளது. 4 வாரத்துக் குள் வழங்கவில்லை எனில் பொதுப் பிரிவில் உள்ளவர்கள் நிய மிக்கப்படுவார்கள்.

அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக, நவம் பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரள மாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

விழாவில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மத்திய சென்னை எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகந்நாதன், மெட் ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குநர் ச.கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் எஸ்.ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

9 comments:

  1. முதல உங்களுக்கு உண்மை பேச பயிற்சி எடுத்துங்க!

    ReplyDelete
    Replies
    1. அய்யாவ திட்டக்கூடாது... 1கிடக்க 1 ஆயிடுச்சுனா யார் பொறுப்பேத்துக்கறது...??

      Delete
  2. Dai, un vayeela dengue pulu nonda

    ReplyDelete
    Replies
    1. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் தீ நுண்மத்தில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும்.[8][24]

      கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.[8] சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.

      Delete
  3. பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
    http://www.kalvisolai.com/2018/11/blog-post_15.html

    ReplyDelete
  4. அறிவிப்பின் மன்னன் எங்கள் அண்ணன்.. தல வாழ்க வாழ்க !!

    ReplyDelete
  5. TRB PG/POLY/BEO/ENG CHEMISTRY Original question paper available from 2001 -2017. PG CHEMISTRY STUDY MATERIAL AVAILABLE. 1.CHEMISTRY MATERIAL 2.EDUCATION MATERIAL ( BEO/PG ).3.GK (TNPSC GP 2,4,VAO Etc ) contact 9884678645
    2012,2013 PG CLEARED, 2017 POLYTECH CLEARED , 2014 DEO MAIN CLEARED, 2012 SET CLEARED, 2010 ( TNPSC BT/JSO/GEOLOGIST CLEARED

    ReplyDelete
  6. Pre primary Amma atchiyil than kondu vanthanga aanal indru varaiyil oru post kuda appoint pannala atharku intha Ammavin arasu ethavathu muyarchi edukkuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி