பகுதிநேர ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்துபணியில் சேர்ந்திருந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2018

பகுதிநேர ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்துபணியில் சேர்ந்திருந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


*பகுதி நேர ஆசிரியர்கள் போலிசான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

*ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு மானிய விலையில்  இருசக்கரவாகனம் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர்செங்கோட்டையன் 116 பெண்களுக்கு மானியத்துக்கான உத்தரவை வழங்கினார்

*இதன்பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  மாணவ-மாணவிகளின் தற்கொலை முயற்சியை தவிர்க்க தனியாருடன் இணைந்து அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்படும்

*இதற்கான பணி அடுத்த வாரம் தொடங்கப்படும். பகுதி நேர ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

*டிஆர்பி, டெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வகையில் வரும் மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்

*அங்கன்வாடியில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 52,414 ஆசிரியர்களை பயன்படுத்தி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்

*சிறந்த ஐ.ஏ.எஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்து சென்னையில் அமைக்கப்பட உள்ள புதிய ஸ்டுடியோவிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் 32 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5 comments:

  1. அமைச்சர் கூறியுள்ளது பாராட்டுக்குரியது.அதேபோல் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக Feserved என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளதை தகுதிவாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து கண்டிப்பாக பட்டியல் வெளியீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதேபோல் ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க free hand out line model drawing எனற சான்றிதழுக்கு தமிழ் வழி கேட்டு முறைகேடாக பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் TRB யின் குளறுபடிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இதுவரை ஏன் கருத்து தெரிவிக்க வில்லை.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவே இல்லாத ஒரு விஷயத்தை காரணமாக காட்டி இதுவரை மறு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது ஏன்? இதையெல்லாம் ஏன் மௌனமாக எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் 300 க்கும் மேற்பட்ட வர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு இன்று வரை TRBயிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை சிறப்பாசிரியர் நியமனத்தில் ஏனிந்த அரசு மெத்தனம் காட்டிவருகிறது.இதற்கெல்லாம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் என்ன சொன்னார் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் ஆனால் இன்று வரை எதுவும் செய்ய வில்லை . இதேபோல் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வரையிலும் காலம் கடந்தினால் பின்னர் எப்போதுதான் பணி நியமன ஆணை வழங்க முடியும் என்ற நிலையில் தேர்வு எழுதி காத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டுள்ள தேர்வர்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தேர்வர்களின் ஒட்டுமொத்த கருத்து.இதனை கலையாசிரியர் நல சங்கமும் பல முறை வழியுறுத்தி வருகிறது.

    ReplyDelete
  2. Excellent method of re- certificateion verification for all thous who participated in the exam certificate verification.

    ReplyDelete
  3. Each special teacher subjects need to be revised with reasonable solutions ....so that only confusion will be clear....once revised cv come along with remaining candidates all details should be open to all....

    ReplyDelete
  4. ஆமாம் .... போலி சான்றிதழ் னா கடும் நடவடிக்கை....
    சான்றிதழே இல்லாமல் வேலை பார்த்தா???...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி