தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2018

தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி


பாரதியார் பல்கலையில், மூடப்பட்ட தனியார் தொலைதுார கல்வி மையங்களுக்கு, 2018- - 19ம் ஆண்டில் மாணவர் சேர்க்கையை அனுமதித்து, சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பல்கலையின் புதிய துணைவேந்தர் தேடல் குழு பிரதிநிதியை தேர்வு செய்வதற்கான, சிண்டிகேட் கூட்டம், நேற்று சென்னையில், உயர்கல்வித் துறை செயலர், மன்கத்ராம் சர்மா தலைமையில் நடந்தது. சிண்டிகேட் பிரதிநிதியாக, சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர், தியாகராஜன், தேடல் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில், தொலைதுார கல்வி மையத்தின் கீழ் உரிய அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வந்த தனியார் மையங்கள் அனுமதி கேட்பது குறித்து, விவாதிக்கப்பட்டது.

பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பாததால், 335 மையங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.தொலைதுார கல்வி மையத்தை நடத்த, பாரதியார் பல்கலைக்கே அங்கீகாரம் இல்லை என்ற நிலையில், மூடப்பட்ட தனியார் மையங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், ஒரு போதும் பரிசீலிக்கப்படாது என அறிந்தும், பல்கலையின் இச்செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், ''தொலைதுார கல்வி முறையில், சில தனியார் மையங்களுக்கு, 2018 - -19ம் ஆண்டுக்கு மட்டும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ''இந்தாண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் கல்வியை முடிக்கும் வரை, மையங்கள் செயல்படும். அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியில்லை,'' என்றார்.

1 comment:

  1. Adei university ke approval innum kidaikkala, DDE course conduct panna. Ivan centers Ku approval kudukuran. Distance education council approval mothalla vangunga da dei.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி