எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2018

எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம், அரசுக்கு இல்லை. அதேநேரம், சில பள்ளிகளில் ஒரு மாணவர், இரண்டு மாணவர்கள் உள்ளனர். அதுபோன்ற பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்கள் சம்பளம், பிற பணியாளர்கள், பராமரிப்பு செலவு, மாணவர்களுக்கான செலவை பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.அதுபோன்ற பள்ளிகளில், கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசை குறை கூறி வரும் அமைப்புகள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தவும் பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி பவள விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயில, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், வருமாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கான வகுப்புகள் கூடுதலாக்கப்படும்.

 மாநில அளவில் ஆண்டுக்கு, 1.60 லட்சம் இளைஞர்களும், தேசிய அளவில், 80 லட்சம் இளைஞர்கள் வரை, பி.இ., படித்துவிட்டு, உரிய வேலை கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். அதுபோன்ற நிலையை, தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் மாற்றும்.நடப்பாண்டு, எட்டு வாரங்களுக்கு மேல், 'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படும். தற்போது, அதற்கான பயிற்சி துவங்கி விட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான, 3,744 இடங்களில், 1,000க்கும் மேற்பட்ட இடங்களை, அரசு பள்ளி மாணவர்கள் கைப்பற்றுவர்.இவ்வாறு, அவர் பேசினார்.

3 comments:

  1. Arasu palli moodum ennam illai...At same time teacher niyamanam illai ...ithu sengaloda mudiyu...adutha newsku redya irunga...

    ReplyDelete
  2. மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்

    ReplyDelete
  3. PG TRB தமிழ்
    பயிற்சி மையம்
    கிருஷ்ணகிரி.
    Contact- 9043344502

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி