CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல் நாள் : 01.11.2018. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2018

CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல் நாள் : 01.11.2018.






*✅  CPS வல்லுநர் குழு GO.No.51 /15.2.18ன் படி 31.03 2018 வரை நீட்டிக்கப்பட்டது.*

 *✅ அதற்கு பின்னர் கால நீட்டிப்பு செய்யப்படவில்லை. கால நீட்டிப்பு அரசாணையும் இன்று வரை  வெளியிடவில்லை.*

*✅ CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம் 22.09.16 அன்று நடந்ததே கடைசியாகும். அதற்கு பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.*

*✅ அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 30.04.2018 அன்றும், 2006 முதல் இன்று வரை 11 முறை  ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.*

 *✅ மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.*

*✅ CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 4012 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.*

CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்

*✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.*

*✅ தமிழக அரசால் இக்குழுவிற்கு  30.08.18 வரை  ரூ.40,000/- செலவு செய்யப்பட்டுள்ளது என   நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.*

நன்றி: திரு.அ.சி.ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி