Flash News : ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைபதிவேடு முறை : அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2018

Flash News : ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைபதிவேடு முறை : அரசாணை வெளியீடு



நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைபதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை நிறைவேற்ற 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே,  பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ள குறிப்பிடத்தக்கது.

8 comments:

  1. 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄சூப்பர்!!!!!!!!!!!!!!!!!!!மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. All govt department staff kum itha implement panuga.why teachers ku matum

      Delete
  2. But ivlo selavu panni intha bio metric system panrathukku pathila yealaigalukku கொடுத்து உதவலாமே

    ReplyDelete
  3. Tetclearseithavar test writepannanuma sollunga

    ReplyDelete
    Replies
    1. It was said like that but till now there is no clarity

      Delete
  4. Idhu yella govt staff kkum indha methodla attendance system kondu vandhal duty kku correct aha varuvanga....Then corruption less panna yadhachum plan panna nalla irukku.....Please idha try penninga.....

    ReplyDelete
  5. Correct,
    அனைத்து அரசு ஊழியர்களையும் சமமா பாருங்க.
    லஞ்சம் வாங்குற துறைக்கு முதல்ல இத செய்யுங்க.
    மக்கள் அதிகாரிகளை பார்க்கவே முடியல.எப்ப வருவாங்க போவாங்கனு கூட தெரியாது,
    கேட்டா சார் மீட்டிங் போயிருக்காங்கனு சொல்றாங்க.
    தினமும் மீட்டிங்னு சொல்லிட்டு எங்க போறாங்கனு அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்

    ReplyDelete
  6. PG TRB chemistry material
    contact No. 9629711075

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி