NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் சிக்கல் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2018

NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் சிக்கல் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா?

எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோறும் டிசம்பர் மாதம் NMMS EXAM எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் தேர்வு நடைபெறுகிறது.
சமீபத்தில் 2017-18 ல் நடைபெற்ற NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை பள்ளி அளவில் பதிவேற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது ஆனால் 31க்குள் இணையதளம் சரிவர இயங்காததாலும்,  பல்வேறு மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றினாலும் அதில் submit என்ற ஆப்ஷன் வராததாலும் அவர்களுடைய விண்ணப்பமானது SAVE & DRAFT நிலையில் தங்கி நிற்கிறது. சில விண்ணப்பங்களில் கல்வித் தொகை பெறுவதற்கான scheme option open ஆகவில்லை.மேற்கண்ட காரணங்களால் மாணவர்களுடைய விண்ணப்பமானது மாவட்ட அளவில் FORWARD செய்யமுடியாமல் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆனது பூர்த்தி செய்ய முடியாமல் கல்வி உதவித்தொகை பெறுவது சிக்கலாகி உள்ளது.
 பள்ளி அளவில் மாணவர்களின் தகவல் உள்ளீடு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31 முடிந்துவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் தகவல்களை உள்ளீடு செய்வது எவ்வாறு என்று  திணறி வருகிறார்கள்.

ஆனால் இதைப் பற்றி தகவல்களை பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களில் எடுத்துக்கூறியும் எந்த ஒரு தெளிவான தகவலும் கிடைக்கவில்லை என்று தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் ஃபார்வர்டு செய்வதற்கு இந்த மாதம் 15ம் தேதி இறுதி நாள் என்பதால் அவர்களுடைய ஊக்கத்தொகை கிடைக்குமா??? இதனை பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா???

மேற்கண்ட பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் தீர்த்து மாணவர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகள் அளவில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

5 comments:

  1. My student also having this problem.

    ReplyDelete
  2. Replies
    1. by enering the roll no without district code , the year 2017 & exam passed NMMS you may get the scheme option or call 7598687540

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. by enering the roll no without district code , the year 2017 & exam passed NMMS you may get the scheme option or call 7598687540

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி