TNPSC - குரூப்-1 நடவடிக்கைகள் இனி 10 மாதத்தில் முடிக்கப்படும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2018

TNPSC - குரூப்-1 நடவடிக்கைகள் இனி 10 மாதத்தில் முடிக்கப்படும்!


'குரூப் - 1 தேர்வு நடவடிக்கைகள், இனி, 10 மாதங்களில் முடிக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் ஆகியோர் அளித்த பேட்டி:

தேர்வாணைய செயல்பாட்டில், வெளிப்படை தன்மையை ஏற்படுத்த, மாற்றங்களை செயல்படுத்தி வருகிறோம். இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை வந்த பின்,விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது. 2010ல், பல்வேறு தேர்வுகளுக்கு, மொத்தம், 17.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.எட்டு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை, ஆண்டுக்கு, 40 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கும் அளவுக்கு உயர்ந்து உள்ளது.

'ஆன்லைன்' வழி விண்ணப்பத்தால், தேர்வர்களிடையேநம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது. தேர்வுகளில், 'அப்ஜெக்டிவ்' வகையில், சரியான விடையை தேர்வு செய்யும் வினாத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஆன்லைன் வழிஇதில், கணினி முறையில், முறைகேடு இன்றி, திருத்தம் நடக்கிறது.தேர்வர்களின் சான்றிதழ்களை, நேரடியாக ஆய்வு செய்யும்முறை மாற்றப்பட்டு, ஆன்லைன் வழியில் சரிபார்க்கப்படுகின்றன. அதனால், தேர்வர்களுக்கும், டி.என்.பி.எஸ்.சி.,க்கும் பணிகள் எளிதாகியுள்ளன.சமீபத்தில் நடந்த, குரூப் - 4 தேர்வுக்கு, 31 ஆயிரத்து, 424 விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் பதிவேற்றம் செய்தனர். அவர்களின் சான்றிதழ்கள், 35 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இந்த பணிகளுக்கு, தேர்வர்களை நேரில் அழைத்திருந்தால், 157 நாட்கள் ஆகியிருக்கும். ஆறு கோடி ரூபாய் அளவுக்கு, வீண் அலைச்சல் மற்றும் போக்குவரத்து செலவு ஏற்பட்டிருக்கும்; இது, தவிர்க்கப்பட்டுள்ளது.கடந்த, 2017ல் நடந்த, குரூப் -1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகளை தவிர்த்து, வேறு எந்த தேர்வு முடிவும், மூன்று மாதங்களுக்கு மேல்நிலுவையில் இல்லை.தேர்வு முடிவு, எப்போது வெளியிடப்படும் என்ற, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, நடப்பாண்டில், 25 புதிய நியமன அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், இன்னும், 20 அறிவிப்புகள் வரஉள்ளன. முந்தைய ஆண்டுகளை காட்டிலும், அதிக அளவுக்கு, இந்த ஆண்டு, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, அரசு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.தேர்வு முடிவுகடந்த, 2017ல் நடந்த, குரூப் - 1 முதன்மை தேர்வுக்கு, விடைத்திருத்தம் விரைவாக நடக்கிறது. டிசம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும்.

வரும் காலங்களில், குரூப் - 1 தேர்வில், அறிவிக்கை வெளியிட்டதில் இருந்து, இரண்டு மாதங்களில், முதல் நிலை தேர்வு முடிக்கப்படும். இரண்டு மாதங்களில், முடிவு வெளியாகும். அடுத்த, இரண்டு மாதங்களில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மூன்று மாதங்களில், அதன் முடிவுகள் வெளியாகும். பின், 15 நாட்களில் நேர்முக தேர்வு நடத்தி, மொத்தம், 10 மாதங்களில், இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

எனவே, தேர்வுகள் குறித்து வெளியாகும் தவறான தகவல்கள்,செய்திகளை, தேர்வர்கள் நம்ப வேண்டாம்.தேர்வுகள் தொடர்பாக, இடைத்தரகர்களையும் அணுக வேண்டாம். விபரங்களுக்கு, contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இது தவிர, தேர்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய வீடியோ, 'யூ - டியூப்' இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறுஅவர்கள்கூறினர்.

1 comment:

  1. PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி.
    Contact : 9043344502

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி