TNPSC - 17 ஆயிரம் காலிப் பணியிடங்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2018

TNPSC - 17 ஆயிரம் காலிப் பணியிடங்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பப்படும்.


அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 17 ஆயிரம் பேரை தேர்வு செய்து பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்ய உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் நந்தக்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரா.சுதன் ஆகியோர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- குரூப்-2 தேர்வு வருகிற 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் (ஆண்கள்-2,72,357, பெண்கள்-3,54,136, மூன்றாம் பாலினத்தவர்- 10) எழுத இருக்கின்றனர். தமிழகம் முழுவதும்2 ஆயிரத்து 268 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.

 சென்னையில் மட்டும் 248 மையங்களில் நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி.தேர்வு முடிவுகளை கடந்த சில மாதங்களாக வேகமாக வெளியிட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குரூப்-4 தேர்வுக்காக 31 ஆயிரத்து 424 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு 35 நாட்களில் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களை நேரில் அழைத்து சான்றிதழ் சரிபார்த்து இருந்தால் 157 நாட்கள் ஆகும். கணினி வாயிலாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ததினால் இது குறைந்து இருக்கிறது. இந்தமாதம் இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும். 2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கும்(குரூப்-1 தேர்வு தவிர) தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம். அதன்படி தான் நடைமுறைப்படுத்தியும் வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் தேர்வு தொடர்பான 25 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 அறிவிப்புகள் வெளிவர இருக்கின்றன.

மார்ச் 2019-க்குள் 17 ஆயிரம் தேர்வர்கள்(குரூப்-4-ல் மட்டும் 11 ஆயிரம் பேர்) தேர்வு செய்யப்பட்டு அரசின் பல்வேறு துறைகளில் எந்த குறைபாடும் இல்லாமல் பணியமர்த்தப்பட உள்ளனர். ஒரு ஆண்டில் இவ்வளவு பேர் பணியமர்த்தப்படுவது இது தான் முதல் முறை. தேர்வு முடிவுகளை வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து2 மாதங்களில் முதல்நிலைத்தேர்வும், அந்த தேர்வு முடிவு அடுத்த 2 மாதங்களிலும், அதில் இருந்து 2 மாதங்களில் முதன்மை எழுத்து தேர்வும், 3 மாதங்களில் அந்த தேர்வு முடிவும், அதையடுத்து 15 நாட்களில் நேர்முகத்தேர்வும் என 10 மாதங்களுக்குள் இறுதி முடிவு வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆண்டு திட்டம் எப்போது? ஒரு சில வினாத்தாள்களை தமிழில் வடிவமைக்க முடியாததால் தான் ஆங்கிலத்தில் வருகிறது. வெகுவிரைவில் அனைத்து வினாத்தாள்களும் தமிழ், ஆங்கிலம் கலந்து கேட்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. அது தான்எங்களுடைய இலக்கு. வெளிமாநிலங்களில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்கள் என்று பார்த்தால் 0.5 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதத்துக்குள் தான் இருக்கும். அடுத்த ஆண்டுக்கான ஆண்டு திட்டம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

அனைத்து அரசு துறைகளிலும் இருந்து தகவல்களும் பெறப்பட்டு வருகின்றன. தேர்வாணைய இணையதளம் பிரச்சினை இல்லாமல் இயங்க புது பதிப்பு(வெர்சன்) மேம்படுத்தப்பட்டு(அப்டேட்) வருகிறது. தேர்வர்கள் தேர்வு குறித்து அவ்வப்போது தவறாக வரும் செய்திகளையோ, வதந்திகளையோ, இடைத்தரகர்களையோ நம்பவேண்டாம். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தை நேரிலோ, contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

13 comments:

  1. இடைத்தேர்தல்.
    உள்ளாட்சி தேர்தல்.
    நாடாளுமன்ற தேர்தல்.
    TRT & TET Exam??

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. எல்லாமே ஒரு மாயை.

      Delete
  2. PG TRB chemistry material
    contact No. 9629711075

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர் கலந்தாய்வு விரைவில் நடைபெறும்-அமைச்சர் செங்கோட்டையன்.

    கல்விச்சிய்தி நியூஸ் போடுங்க

    ReplyDelete
    Replies
    1. Ithu minister famous dialog coming soon.

      Delete
    2. இப்போயாச்சும் நடத்துகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள்.

      Delete
  4. டி.என்.பி.எஸ்.சி ராக்கெட்ல போறாங்க. டிஆர்பி ரெண்டு வருஷமா ஒரே இடத்தில இருக்காங்க

    ReplyDelete
  5. Exam varum but posting poduvangala tet p1 and p2 ku

    ReplyDelete
  6. Exam varum but posting poduvangala tet p1 and p2 ku

    ReplyDelete
  7. TNPSC👌👌👌👌👌👏👏👏👏👏 TRB👎👎👎👎😲😲😱😨😠😷😭😠

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி