TNPSC - குரூப் 2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2018

TNPSC - குரூப் 2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம்!



குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் எனப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,199 பணியிடங்களுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்திருந்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வைக் கண்காணிக்கும் பணியில் 31,349 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.



தேர்வு வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தந்தை பெரியார் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. நானும் திருச்செங்கோடு தான்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி