TNPSC - அனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2018

TNPSC - அனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்!


'அனைத்து தேர்வுகளுக்கும், இனி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வினாத்தாள் அமைக்கப்படும்' என,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வு,தமிழ், ஆங்கில ,வினாத்தாள்,டி.என்.பி.எஸ்.சி., திட்டவட்டம்

தமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி என, இரண்டு வகைகளில், வினாக்கள் வழங்கப்படும்.

புகார்:

இந்நிலையில், சில பாடங்களுக்கு மட்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிப்பதில்லை என்ற, புகார் எழுந்தது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் மற்றும் செயலர் நந்தகுமார் கூறியதாவது:

'குரூப் - 2' தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்துக்கு மட்டும், தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சரியாக அமையாததால், அதற்கு, ஆங்கில வழி வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

நடவடிக்கை:

எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தயாரிப்பை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

2 comments:

  1. நூறு கேள்வில குறைந்த பட்சம் இருபது கேள்வி தமிழ், ஆங்கிலம் கட்டாயம் வேண்டும்.

    ReplyDelete
  2. Namma Tamilnadu la Staff illaya America England keaya Paadam sollithara Namma TNPSC la all illlaya Think Tamil Aliya Tamilan than kaaranam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி