TRB - சிறப்பு ஆசிரியர் தேர்வில் நடந்த முறைகேடு என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2018

TRB - சிறப்பு ஆசிரியர் தேர்வில் நடந்த முறைகேடு என்ன?


சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமன நடவடிக்கையில், ஜாதி உட்பட, தனி நபர் விபரங்களில் குளறுபடி நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 1,325 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017ல் போட்டி தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டது. இறுதிபட்டியல், அக்டோபரில் வெளியானது.

இந்த பட்டியலில் தகுதியுள்ள பலர், புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஓவியம், தையல், உடற்கல்வி போன்ற பிரிவில், ஆசிரியர் பணிக்கு, தேர்வர்கள் தமிழ் வழி சான்றிதழ் சமர்ப்பிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.அரசு தரப்பில், தமிழ் வழி சான்றிதழ் வழங்காத நிலையில், தனியார் நிறுவனங்களில் பெறப்பட்ட சான்றிதழ் ஏற்று கொள்ளப் பட்டதாக, தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில், ஒரு பெண் தேர்வரின் ஜாதி ஒன்றாகவும், இறுதி பட்டியலில் வேறு ஒன்றாகவும் குறிப்பிட்டுஉள்ளது. அதேபோல், 'மற்றொரு பெண் தேர்வரின்சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலிலும், இறுதிபட்டி யலிலும்,கணவனை இழந்தவர் என்றும், மற்றொன்றில், பொது பிரிவு என்றும் உள்ளது' என, குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறுகையில், ''சிறப்பு ஆசிரியர் பணி நியமன நடவடிக்கை குளறுபடிகள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

11 comments:

  1. இத்தனை பிரச்சினைகள் நிலவிவரும் சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதது போல் பேட்டி அளித்துள்ளார் இதனை தேர்வர்களின் சார்பாக வண்மையாக கண்டிக்கிறோம்.சிரப்பாசிரியர் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி முறையான பதிலை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.இல்லாவிட்டால் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான கருத்து.

    ReplyDelete
  2. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தற்போது சிரபப்பாசிரியர் பட்டியலில் நிலவிவரும் தொடர் பிரச்சினைகள் தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டு தற்போது எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது சரியல்ல அமைச்சர் என்ற முறையில் தற்போதைய சூழ்நிலையில் நாள்தோறும் பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் பல்வேறுவிதமான சர்ச்சைகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இப்படி பொறுப்பற்ற பதிலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுவது ஏற்புடையது அல்ல.என்பதே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்களின் கருத்தாகும்.

    ReplyDelete
    Replies
    1. இது தேர்வார்களின் கருத்து அல்ல உன் தனிப்பட்ட கருத்து

      Delete
  3. PG TRB Chemistry material
    contact No. 9629711075

    ReplyDelete
  4. இந்த சிறப்பாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெள்ளத்தளிவாக புரிந்து கொண்டு பின்னர்தான் அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.நாள்தோறும் ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு பதில் அளிக்கப்படாமல் உள்ள நிலையில் இந்த அரசு செயலற்ற நிலையில் உள்ளது தகுதிவாய்ந்த தேர்வர்களை கலக்கமடையச் செய்கிறது.மாண்புமிகு தமிழக முதல்வராவது இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண முன் வரவேண்டும் என்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரது ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. ஒட்டுமொத்த தேர்வர்களின் கருத்தல்ல...உன் தனிப்பட்ட கருத்து

      Delete
  5. பாதிக்கப்பட்டவர்கள்க்கு மட்டும்தான்
    குளருபடி தெரிகிறது மற்றபடி selection list இருக்கிறவர்களுக்கு
    இதையெல்லாம் கண்டுபிடித்து
    சொல்லுபவர்கள் குற்றவாளிகள்.
    நமக்குமட்டும் வேலைகிடைத்தால்போதும் சுயநலவாதிகள்.அட இவர்களைகூட
    விடுங்க ministerபார்வை போய்விட்டதா குளருபடி இல்லை என்கிறார் ஐயா ஐயா நன்றாக பாருங்க ராசா 🙆🙆🙆🙆

    ReplyDelete
  6. ஆசிரியர் தேர்வு வாரியத்ததை கலைத்துவிட்டு தமிழ் நாடுஅரசு ப்பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்ற முடிவை வரவேற்கிறோம் வரவேற்கிறோம். அதே போல் நாளைய தினம் தமிழக முதல்வரை சந்தித்து சிரப்பாசிரியர் நியமனம் குறித்து கலந்து ஆலோசித்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து முறையான தகுதிவாய்ந்த தேர்வர்களின் நலன்கருதி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரது சார்பாகவும் தேர்வர்களின் சார்பாகவும் மணமார்ந்த நன்றி களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரைகுறையாக RESERVED என்று நிரப்பாமல் வெளியீடு செய்த பட்டியலை நீக்கம் செய்து விட்டு மறுபடியும் முறையாக வரைமுறை செய்து 1:2 என்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  7. 2017 special teachers ku posting podum pothu athey 2017 la pass ana tet paper 1 and 2 ku posting poda vendiyathu thane??

    ReplyDelete
  8. Candidates who are seriously preparing to crack English Literature SET/NET/PGTRB/POLYTECHNINIC EXAM may prepare the specially prepared CD with over 4500 Questions with Answers..This CD is designed Literary-Period wise which would arise the interest of the candidates while studying/preparing for the exams..
    Genuine and Interested candidates may Contact on 9600837663..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி