உலக வரலாற்றில் இன்று ( 05.12.2018 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2018

உலக வரலாற்றில் இன்று ( 05.12.2018 )



டிசம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1082 – பார்சிலோனா மன்னன் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டான்.
1360 – பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
1492 – கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
1497 – போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
1746 – ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
1848 – கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1893 – மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
1933 – யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1934 – இத்தாலியப் படைகள் அபிசீனியாவின் வால் வால் நகரத்தைத் தாக்கினர்.
1936 – சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: கியோர்கி சூக்கொவ் தலைமையில் சோவியத் படைகள் ஜெர்மனிய ஆக்கிரமிப்புக்க்கு எதிராக மாஸ்கோவில் பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
1957 – இந்தோனீசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 – STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 – அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1978 – சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983 – ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 – இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
2003 – தெற்கு ரஷ்யாவில் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2006 – பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
2006 – இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

பிறப்புக்கள்

1782 – மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
1901 – வால்ட் டிஸ்னி, உலகப் புகழ் பெற்ற ஓவியர் (இ. 1966)
1901 – வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1976)
1966 – தயாநிதி மாறன், இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சர்
1985 – ஜாஷ் ஸ்மித், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
1985 – ஷிகர் தவான், இந்தியத் துடுப்பாட்ட வீரர்.

இறப்புகள்

1791 – மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (பி. 1756)
1879 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் தந்தை, (பி. 1822)
1926 – குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (பி. 1840)
1950 – ஸ்ரீ அரவிந்தர், இந்திய ஆன்மீகவாதி, (பி. 1872)
1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் (பி. 1899)
2013 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)

சிறப்பு நாள்

தாய்லாந்து – தேசிய நாள், தந்தையர் நாள்.
பெல்ஜியம், செக் குடியரசு, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் – புனித நிக்கலஸ் மாலை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி