உலக வரலாற்றில் இன்று ( 07.12.2018 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2018

உலக வரலாற்றில் இன்று ( 07.12.2018 )



டிசம்பர் 7 கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 43 – ரோம அரசியல்வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டான்.
1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து மதத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
1787 – டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1900 – மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
1910 – யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
1946 – ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1949 – சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.
1966 – துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் “அப்போலோ 17” சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1975 – கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
1983 – ஸ்பெயின் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் கொல்லப்பட்டனர்.
1988 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1988 – யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.
1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

பிறப்புக்கள்

1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்கப் பேரறிஞர்
1929 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)

இறப்புகள்

1947 – நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
1956 – லாரி பர்ட், முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர்
1985 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1895)
1993 – வூல்ஃப்காங்க் போல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)
1998 – மார்ட்டின் ரொட்பெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)

சிறப்பு நாள்

ஐக்கிய அமெரிக்கா – பேர்ள் துறைமுக நாள்
கொடி நாள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி