'குரூப் - 1' தேர்வு : 1.37 லட்சம் பேர் காத்திருப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2018

'குரூப் - 1' தேர்வு : 1.37 லட்சம் பேர் காத்திருப்பு


'குரூப் -- 1' தேர்வு முடிவுக்காக, 1.37 லட்சம்பேர், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 1 பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டது.இதன்படி, துணை கலெக்டர் - 29; டி.எஸ்.பி., - 34; வணிகவியல் உதவி கமிஷனர், தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி பதவிகளுக்கு தலா - எட்டு. துணை பதிவாளர் - ஒன்று, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - ஐந்து என, மொத்தம், 85 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.முதல் நிலை தகுதி தேர்வு, 2017 பிப்., 19ல் நடந்தது.

இதில், 1.37 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, 2017 அக்., 13, 14, 15ம் தேதிகளில், பிரதான எழுத்து தேர்வு நடந்தது. முடிவுகள், 2018 ஜூனில் எதிர்பார்க்கப்பட்டன.ஆனால், 14 மாதங்களாகியும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு கள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

1 comment:

  1. DEO Preliminary and main original question papers available. gk material for preliminary exam also available
    9884678645

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி