ஜனவரி, 15 வரை 'இக்னோ'வில் அட்மிஷன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2018

ஜனவரி, 15 வரை 'இக்னோ'வில் அட்மிஷன்


அனைத்து பட்டப் படிப்புகளுக்கும், ஜனவரி, 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும்' என, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ' அறிவித்துள்ளது.

இது குறித்து, இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இக்னோவால் நடத்தப்படும், பட்டப் படிப்புகள், முதுநிலை படிப்புகள், டிப்ளமாமற்றும் சான்றிதழ் படிப்புகள், சிறப்பு பி.காம்., - எம்.காம்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனுமதி, 2023 வரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இக்னோவில், அனைத்து வகை படிப்புகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை, ஜன., 15 வரை நடக்கும்.விண்ணப்பங்களை, https://onlineadmission.ignou.ac.in என்ற, இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, rcchennai@ignou.ac.in என்ற, 'இ - மெயில்' முகவரி, 044 - -2661 8438, 2661 8039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி