2 பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2018

2 பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் அதிருப்தி


அரசு பள்ளிகளில், இரு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க, கெடுபிடி காட்டுவதால் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. புத்தக பக்கங்கள் அதிகமாக இருந்ததால், இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. முதல்பகுதி பாடத்திட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பகுதி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.

பாடங்கள் நடத்துவது குறித்து, முதுகலை ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.சேலம் மாவட்டத்தில், பல மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவால், உயிரியல், தாவரவியல் பாடங்களை, ஒரே ஆசிரியர் நடத்தும் நிலை காணப்படுகிறது.கடந்த, 6, 7ல், தாவரவியல் ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, டிசம்பர் 10 (நாளை), 11ல், மேட்டுப்பட்டி, சேலம் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், ஏற்கனவே தாவரவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்கக்கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்

6 comments:

  1. Computer science ku ennum first volumeke entha training classum kudukala

    ReplyDelete
  2. Nadatha solvathu botany um & zoology um.....but training oru subject kku mattumaaa...????? Enna niyayam govt.....!!!!???

    ReplyDelete
  3. Pg Trb commerce friends nala padinga 9952636476

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி