பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் வெளியானவேதியல், உயிரியியல் வினாத்தாள்: தகவல் தெரிந்தும் தேர்வை நடத்தி முடித்த பள்ளி கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2018

பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் வெளியானவேதியல், உயிரியியல் வினாத்தாள்: தகவல் தெரிந்தும் தேர்வை நடத்தி முடித்த பள்ளி கல்வித்துறை


தேர்வுக்கு முன்னரே பிளஸ் 2 வேதியியல், உயிரியியல் வினாத்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியான விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்தும் பள்ளி கல்வித்துறை தொடர்ந்து தேர்வை நடத்தி முடித்துள்ளது.

தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வரையான வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தன. இதற்கிடையே 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கணக்கில் கொண்டு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் வடிவமைக்கப்படுகின்றன. அவைபள்ளிகளுக்கு குறுந்தகட்டில் வழங்கப்படும். அதை பிரின்ட்எடுத்து பள்ளிகள் தேர்வுகளை நடத்திக் கொள்ளும். வினாத்தாளில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்னர் பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் சமூகவலைதளங்களில் வெளியானது. ஆனால், அந்த வினாத்தாள் முழுவதும் ஆங்கிலத்தில் இருந்ததால்அது போலியானதாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அப்போது சமூக ஊடகங்களில் வெளியான அதே வேதியல், உயிரியியல் வினாத்தாளே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இரு வினாத்தாளும் ஒன்று என்பதை அறிந்த ஆசிரியர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்துபள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வு ரத்துசெய்யப்படலாம் என தகவல்கள் பரவின. ஏற்கெனவேகடந்த 18-ம் தேதி நடந்தபிளஸ் 2 உயிரியியல் வினாத்தாளும் தேர்வுக்கு முன்னரே வெளியானது. இந்த சூழலில் மீண்டும் வேதியியல் வினாத்தாளும் வெளியாகியுள்ளது கல்வித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வினாத்தாள்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்துதான் வெளியாகியுள்ளன. வினாத்தாளில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் கேள்விகள் இருக்கும். ஆனால், சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஆங்கில மொழியில்மட்டுமே வினாத்தாளை தயாரித்து தேர்வு நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தனியார் பள்ளிகள் மூலம் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன. இது பல மாவட்டங்களுக்கு பரவவில்லை என்பதால்,அப்படியே தேர்வை நடத்திவிட்டோம்.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்’’ என்றனர். மறுபுறம்அரையாண்டுத் தேர்வு என்பதால் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். வினாத்தாள் வெளியானபோதே விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதனால் மாணவர்கள் கல்விதான் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி