அரசு பள்ளிகளில் 6 மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை : ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2018

அரசு பள்ளிகளில் 6 மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை : ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம்


அரசு பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் தலைமை ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம் செய்யும்  அவலம் மானாமதுரையில் நிலவுகிறது.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 93 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய அந்தந்த பகுதிகளை சேர்ந் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய துவக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூ.ஆயிரமும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதுதவிர கிருமி நாசினிகள், பினாயில், பிளிச்சிங் பவுடர் ஆகியவையும் மாதம் ஆயிரத்திற்கு மிகாமல் வாங்கி பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக அரசு பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படாததால் சுகாதார பணியாளர்கள் மேற்கொள்வதில்லை.

இதில் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றமடிப்பதால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். மாணவிகள் திறந்த வெளியை பயன்படுத்த முடியாததால் இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுகாதாரப் பணி செய்தவருக்கு 7 மாதங்களாக சம்பளம் வழங்காத நிலையில், ஊழியர் வேலை நிறுத்தம்  செய்தார். வேறுவழியின்றி பள்ளியின் மாணவ, மாணவியர் பயன்படுத்தும் கழிவறைகளை தலைமையாசிரியர் தினமும் சுத்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

நிதி வரவில்லை

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதந்தோறும் நிதி அனுப்பப்படும். இந்த நிதியை பள்ளிகளில் இயங்கி வரும் பெற்றோர் ஆசிரியர் சங்க வங்கி கணக்கிற்கு நாங்கள் காசோலைகளாக செலுத்தி விடுவோம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதனை வங்கியில் இருந்து எடுத்து சுகாதார பணியாளர்களுக்கு வழங்கி விடுவர். ஆனால் கடந்த 6 மாதங்களாக ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து நிதி வரவில்லை. எனவே நாங்கள் அனுப்ப வில்லை என்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி