Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர்அளித்த பேட்டி:

தமிழகத்தில் 250 பள்ளிகளில் புதிதாக ரூ. 1,142கோடி மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.23 கோடியில் 3 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

எங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையும் பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக 6,500 பேருக்கு மேல் உள்ளனர்.அவர்களுக்கும் பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் விரைவில் நிரந்தரமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும்.ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர் ஆசிரியரும் அல்ல. பெற்றோரும் அல்ல. அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு அரசு உரிய விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.

காலிப் பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.கடந்த ஆண்டில் 13,100 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டனர். நடப்பு ஆண்டிலும் 11 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவை இணைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்படவில்லை. தேவையான நிதி கோரப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை நிதி வழங்கலாம். குறைவாக அளித்தால், மத்திய அமைச்சரை சந்தித்து உரிய நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, நமக்கு வழங்க வேண்டிய ரூ. 1,100 கோடி நிதியில் ரூ. 472கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மீதமுள்ள நிதி விரைவில் கிடைக்கும். தமிழக அரசுக்கு எந்தப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை.

ஜனவரி 21-இல் அங்கன்வாடியில் உள்ள 51,214 மாணவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு மாற்றப்படவுள்ளனர். அடுத்த ஆண்டில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதால், ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களுக்குமேல் படிக்கும் நிலை ஏற்படும். அரசாணையை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17. பி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களே அரசாணையை எரிப்பது ஏற்புடையதல்ல.

அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் உள்பட 11 பேர் பதவி இழந்தனர். அரசாணை, அரசியலமைப்புச் சட்டம் என எதுவாக இருந்தாலும் அதை எரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகவே தற்போது விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

38 comments

 1. ரூ 7500 ல் ஆசிரியர்கள் நியமனமா.... or.....7500 ஆசிரியர்கள் நியமனமா.... தெளிவா சொல்லுங்க...

  ReplyDelete
 2. Yaru da mic kodukka
  Pressure athigamaguthu ......tet TRB notification December la varum nu sonnaru promotion venum salary venumna nenaikatheenga plz tet TRB kelunga

  ReplyDelete
 3. Ivanukku oru brain transplant pannungappa.omg ivannukka vai savadal control panna oru remote kodu God

  ReplyDelete
 4. TNPSC DEO PRELIMINARY AND MAIN ORIGINAL QUESTION PAPER AVAILABLE ( 2014 ). PRELIMS GK MATERIAL AND EDUCATION ( BED SYLABUS ) MATERIAL ALSO AVAILABLE. 9884678645

  ReplyDelete
 5. கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவர்களே கண்டு வியக்கும் விசித்திரமான வியாதி....

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. Thargaliga amachare election vai athu kooda illama poga pora, naanga yaarunu kaaturom, nee temporary posting potta naanga ungala nambuvomnu nenachaya ithu engala mealum kaayapaduthuthu

  ReplyDelete
 9. அறிவிப்பு அறிவித்தும் அது தெளிவாக இல்லை...மணிக்கு ஒருமுறை மங்குனி அமைச்சர் என்பதை நிருபிக்கிறார்....

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது

  ReplyDelete
 12. உன் வாய்க்கு வாப்புத்து வர

  ReplyDelete
 13. 814 பேருக்கும் பணத்தை வாங்கிட்டிகளா........................

  ReplyDelete
 14. Sir ethuvarakum, Tet Tet nu eruthu en valkkaila,, private schoolku poga kuda experience Ellama expire agiten...unmailaye nenga எப்போ job poduringalo appam interview kudunga sir.... Ungala நம்பி நம்பி emanthathu போதும்........... Pls

  ReplyDelete
 15. Sir viraivil nu sola maranthutiga

  ReplyDelete
 16. அதிகமானவர்களின் வாழ்க்கையில் விளையாடுறீங்க

  ReplyDelete
 17. current year 11,000 vacant epo da fill panuninga??list vidama amount vangitu posting potacha

  ReplyDelete
 18. காலிப் பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.கடந்த ஆண்டில் 13,100 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டனர். நடப்பு ஆண்டிலும் 11 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்  இது உண்மையா? Promotion பற்றி சொல்கிறாரா? ஏன்னா, 2 ஆண்டுகளாக டிஆர்பி ஒன்றுமே செய்யவில்லையே. அதனால் ஒரு சிறிய சந்தேகம்

  ReplyDelete
 19. This news was fake. Rs7500 salary. not for vacancies temporarily teaches salary is 7500. Today news paper read all are pls

  ReplyDelete
 20. அமைச்சருக்கு இதுவே ஒரு பைத்தியம்

  ReplyDelete
 21. வேலை கிடைத்தவர்களும் திட்டுகிறார்கள். வேலை கிடைக்காதவர்களும் திட்டுகிறார்கள்.

  ReplyDelete
 22. Ennada ethu kodumaya erukku last year 13100. posting pottangalam. intha year 11000 posting.eppidai unnala mudiethu thanga mudiyalada unnudaya tholla.

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. ஐயா நீ சரியான ஊழல்வாதி ... கல்வி துறையில் ஊழல் பண்ணுறியே கண்டிப்பா உன் குடும்பம் வெளங்காம போய்டும் டா ...

  ReplyDelete
 25. Education Minister sengottaiyan is very very best advertisement

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. விருதுநகர் மாவட்டத்தில் TET Pass BT Tamil(MBC) காலி இடம் உள்ளது.
  Send ur resume to my whatsapp number
  9843534005.Amount Applicable

  ReplyDelete
 28. 11000 teacher *1000000(10 laksh-average)=????????????????=minister ,over

  ReplyDelete

 29. தாங்கள் கல்வி அமைச்சராக வந்த
  இத்தனை மாதங்களாய்
  தாங்கள் செய்தவற்றை கூறுங்கள்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives