8ம் வகுப்பு பொது தேர்வு 'தத்கல்' தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2018

8ம் வகுப்பு பொது தேர்வு 'தத்கல்' தேதி அறிவிப்பு

எட்டாம் வகுப்பு, தனி தேர்வர்களுக்கான, தத்கல் விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களுக்கு, ஜனவரில் நடக்க உள்ள, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் முறையில், சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஜன.,1ல், பனிரெண்டரை வயது முடிந்தோர், விண்ணப்பிக்கலாம்.டிச., 11, 12 மற்றும் 13ம் தேதிகளில், அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கான விரிவான தகவல்களையும், சேவை மைய விபரங்களையும்,www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி