அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2018

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை போல் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

 ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

 ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடையை ேபான்றே அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும்.தனியார் பங்களிப்பு நிதி மூலம் 122 பள்ளிகளில்ஸ்மார்ட்  வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

புதிதாக தொடங்கப்பட உள்ளஎல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி கற்றுத்தரப்படும்.  கோபி அருகே உள்ள கொளப்பலூரில் அரசு சார்பில் புதிய டெக்ஸ்டைல் பார்க் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும். கோபி தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1,840 வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும் 2,800 வீடு  கட்ட ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5 comments:

  1. அதெல்லாம் சரி டெட் பாஸ் பன்னவங்களுக்கு எப்ப வேலை கொடுபீங்க

    ReplyDelete
    Replies
    1. No vacancy .. எப்படி fill Panna முடியும்

      Delete
  2. திட்டனும் போல இருக்கு

    ReplyDelete
  3. ஏய்யா இப்படி தேவைல்லாத வேலையா செய்கிற🙆🙆🙆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி