வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த வேலையை பார்க்க சென்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2018

வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த வேலையை பார்க்க சென்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை !


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு மேல்நிலை பள்ளியில் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த வேலையை பார்க்க சென்ற ஆசிரியர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.

ஓசூர் அடுத்த மாசிநாயக்கன் பள்ளிக்கு மாவடட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி ஆய்வுக்காக சென்ற போது தலைமை ஆசிரியர் குபேந்திரன் பணியில் இல்லை. அவர் உட்பட பள்ளியில் மொத்தமுள்ள 13 ஆசிரியர்களும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளனர்.

ஆனால் 7 பேர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். மாலை வரை பள்ளியில் காத்திருந்தும் வெளியில் சென்ற ஆசிரியர்கள் வராததால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மகேஷ்வரி பரிந்துரைத்துள்ளார். இந்த பள்ளியில் கடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 29 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. நிறைய அரசு பள்ளிகளில் இது தான் நடக்கிறது.ஆனால் அவர்கள் பிள்ளைகள் மட்டும் தனியார் உயர் ரக பள்ளிகளில் படிக்கும்.

    ReplyDelete
  2. ithu than arasu aasiriyargaloda nilai...
    olukkama velai pakkuravanukkum ketta peru.
    enaku therinju TET pass panni posting pona alunga kooda silar andha mathiri poruppu illama irukanga

    ReplyDelete
  3. Matrix and selvam selvam ellathaiyum appadi sollathinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி