'ஜாக்டோ - ஜியோ' ஸ்டிரைக் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2018

'ஜாக்டோ - ஜியோ' ஸ்டிரைக் ஒத்திவைப்பு


'நிலுவைத் தொகை பலன்களை, 2016 ஜனவரியில் இருந்து வழங்க வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கையை, ஒருநபர் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன., 7ல் தெரிவிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அதுவரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில் உறுதியளிக்கப் பட்டது.'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஏழாவது சம்பளக் கமிஷனின், 21 மாத நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்' என வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், டிச., 4 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

வழக்கறிஞர் லோகநாதன், 'வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார். விசாரணையின் போது, வேலை நிறுத்தத்தை, டிச.,10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஜாக்டோ - ஜியோ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதிகள், 'ஓய்வூதிய திட்டம் தொடர்பான, ஸ்ரீதர் கமிஷனின் அறிக்கையை, அரசு தரப்பில், நாளை தாக்கல் செய்ய வேண்டும்.

 'நிலுவைத் தொகை பலன்களை, 2016 ஜனவரியில் இருந்து வழங்க வேண்டும் என்ற ஊழியர்கள் தரப்பு கோரிக்கையை, சித்திக் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன.,7ல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.அதுவரை வேலை நிறுத்தத்தை, தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஜாக்டோ - ஜியோ தரப்பு வழக்கறிஞர், நீதிபதிகளிடம் உறுதியளித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி