மாணவி தற்கொலை எதிரொலி : பள்ளி மாடிகளில் கம்பிவேலி - கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2018

மாணவி தற்கொலை எதிரொலி : பள்ளி மாடிகளில் கம்பிவேலி - கல்வித்துறை உத்தரவு.


சிவகங்கையில், மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாடிகளில் கம்பிவேலி அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையில் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து இரண்டு மாணவியர் மாடியில் இருந்து குதித்தனர்.ஒரு மாணவி இறந்தார்; மற்றொரு மாணவி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவங்களால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து 'மாடிகளில் இருந்து கீழே குதிக்க முடியாதபடி உடனடியாக கம்பிவேலி அமைக்க வேண்டும்; மொட்டை மாடிக்குச் செல்ல முடியாதபடி கதவை பூட்ட வேண்டும்' என, உத்தரவிட்டனர். மேலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு மாணவர்களை வழிநடத்துவது குறித்து கவுன்சிலிங் நடத்தவும் முடிவு செய்தனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தவறு செய்தாலும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக எச்சரிக்க கூடாதுஎன, ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அனுப்பவும் உத்தரவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி