மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்'



மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் தொகையில் அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டாக பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களை குறிவைத்து மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி தேசிய பென்சன் திட்டத்தின் கீழ், 2004 ம் ஆண்டு ஜனவரி அல்லது அதற்கு பின் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையில் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் 14 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக மத்திய அரசு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்சன் தொகை அதிரடியாக அதிகரிக்கும்.தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள தொகையில் 10 சதவீதம் பென்சன் நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது.

மத்திய அரசும் 10 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவின்படி, மத்திய அரசு அளிக்கும் பென்சன் நிதி பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனால் 60 வயதில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியரின் பென்சன் தொகை வெகுவாக அதிகரிக்கும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் பங்களிப்பை அதிகரிக்க நிதி மசோதாவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த புதிய பயன் 2019 ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு இது புதிய பயன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு நிறுத்தி வைத்துள்ளது.2004 ம் ஆண்டு திட்டத்தின் படி, வருமான வரி விதியின்கீழ் ஊழியர்களின் பங்களிப்பு தொகையில் வரி விலக்கு அளிக்க முடியாது. தற்போது இந்த விதியிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

2 comments:

  1. 10% தொகை கொள்ளை அடித்தது போதவில்லை.14% கொள்ளையடிக்கனுமாம்?

    ReplyDelete
    Replies
    1. Dear sir
      Employee contribution remains same as 10%
      Govt contribution alone increased into 14%
      Read the content carefully sir.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி