ஒரு குறிப்பிட்ட திசையில் வானொலிப் பெட்டியைத் திருப்பி வைக்கும்போது, குறிப்பிட்ட வானொலி நிலைய நிகழ்ச்சிகள் நன்றாகக் கேட்பது ஏன் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2018

ஒரு குறிப்பிட்ட திசையில் வானொலிப் பெட்டியைத் திருப்பி வைக்கும்போது, குறிப்பிட்ட வானொலி நிலைய நிகழ்ச்சிகள் நன்றாகக் கேட்பது ஏன் ?



பெரும்பாலான கையடக்க வானொலிப் பெட்டிகளில் ஆன்டெனாக்கள் (antennas) பெட்டிக்குள்ளேயே அமைந்துள்ளன; அவற்றின் பணித்திறன் திசைக்கேற்றவாறு மாறக் கூடியது.

வானொலிப் பெட்டிகளில் பொதுவாக இருவகைஆன்டெனாக்கள் உண்டு; மத்திய அலை (medium wave) ஒலிபரப்பை உள்வாங்கும் சுருள் கம்பி ஆன்டெனா (coil antenna), சிற்றலை ஒலிபரப்பை எற்கும் வளைகம்பி ஆன்டெனா (loop antenna) என்பனவே அவை. குறைவான இடத்தையே அடைத்துக் கொள்ளும் என்பதால் இவ்வகை ஆன்டெனாக்களே கையோடு எடுத்துச் செல்லக்கூடிய வானொலிப் பெட்டிகளில் பயன்படுத்தப் பெறுகின்றன.

ஆனால் இந்த ஆன்டெனாக்கள் ஒலிபரப்பு அலைபரப்பியின் (broadcasting transmitter) திசைக்கேற்றவாறு இருக்குமானால் சிறப்பான முறையில் வானொலி நிகழ்ச்சிகளை நாம் கேட்க இயலும். சுருள்கம்பி ஆன்டெனா என்பது ஒரு கம்பியினால் இரும்புத் தண்டைச் சுற்றி செய்யப்படுவதாகும். இவ்வகை ஆன்டெனாவின் அச்சு, ஒலியலை சமிக்கைகளுக்குச் செங்குத்தாக இருக்குமானால் வானொலியின் ஒலிபரப்பு நன்றாகக் கேட்கும்; மாறாக ஆன்டெனாவின் அச்சும் ஒலியலைகளும் ஒரே தளத்தில் இணையாக இருக்குமானால் ஒலிபரப்பு வலிமையின்றி மிகவும் மென்மையாகக் கேட்கும். வளைகம்பிஆன்டெனா என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முழு கம்பி வளையங்களாலானது.

இவ்வகை ஆன்டெனாக்களில் ஒலிபரப்பின் வன்மை மென்மைகள் மேற்கூறிய சுருள்கம்பி ஆன்டெனாக்களுக்கு நேர் எதிரான முறையில் அமையும்; அதாவது சமிக்கைகளுக்கு இணையான தளத்தில் இருந்தால் வலிமையாகவும், செங்குத்தாக இருப்பின் மென்மையாகவும் இருக்கும். இக்காரணங்களாலேயே நிலையங்களின் ஒலிபரப்புக்கு ஏற்ற வகையில் வானொலிப் பெட்டியின் திசையை மாற்றி எத்திசையில் சிறப்பாக ஒலிபரப்பைக் கேட்க இயலுகிறதோ, அத்திசையில் வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைக் கேட்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி