Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சோழர் வீரம் அறிவோம்!!!

 மகா ராஜ ராஜ சோழரின் மகன் மாவீரர் ராஜேந்திர சோழர்...
தமிழ் நாட்டில் இன்னும் அந்நியனின் போர்த் திறனை வியந்து நம் ஒப்பற்ற அரசர்களின் திறனை மறந்தும் ,மறைத்தும் வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமே!!….

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், பிரான்சின் நெப்போலியன்,முக
லாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன், அரசியல், சாணக்கியம்,கலை ,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன்.
இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிச் சொல்லி கொள்ள வேண்டிய ஒரு தமிழன்தான் இந்த இராஜேந்திர சோழன். இவனின் காலடி தூசிக்கு கூடத் தகுதி அற்றவர்களை மாவீர்ர்கள் என புகழ் பாடிக் கொண்டு இருக்கிறோம்….
1.இவ்வருடத்திலிருந்து சரியாக 1000 வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் ,சோழப் பேரரசின் தனி பெரும் மன்னனாக முடி சூட்ட பட்டான்.
2.இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள்,லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன.இப் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும்,அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்ததும் ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே.
3.தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா,ஒரிசா,பீகார்,மே
ற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும், கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலே
சியா, காலடியில் வைத்து இருந்தான்.
சற்றே இவரின் கடார படையெடுப்பின் கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவைபட்டு இருக்கும்??.மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்களை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் வீர மன்னனாவான்.
4.இராஜேந்திரன் தனி பெரும் மன்னாக முடி சூட்டி கொள்ளும் பொழுது அவனுக்கு வயது 50ஆக இருக்கும் என கருதப்படுகிறது.
கப்பற் படைக்கு தலைமை ஏந்தி கடாரம்(இந்தோனேசியா) செல்லும் பொழுது இவனின் வயது 61.அறுபது வயதிலும் இளைஞனுக்கு உரிய மனித நிலையில் இருந்துள்ளார்.
5.கங்கை படையெடுப்பின் போது,கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மறு முனைக்கு எப்படி செல்வது என்று புரியாமல் இருந்த போது,இவனது படையின் நூற்றுக்கணக்கான யானைகளை வரிசைப்படுத்தி, லட்ச கணக்கான வீரர்களை மறு முனைக்கு கொண்டு சென்றனர்.
6.கங்கை படையெடுப்பில் வென்ற பிறகு,தோற்ற மன்னர்களின் தலையில் புனித கங்கை நீர் குடங்களை வைத்து சோழ நாடு முடிய அவர்கள் கொண்டு வரப் பட்டனர்.இப்படையெடுப்பின் போது வங்கத்தை ஆண்ட புகழ் மிக்க மன்னன் மகிபாலனை பெரும் போரிட்டு வென்ற பெருமைக்குரியது இவனின் வீரப் படை.
7.கங்கையில் கொண்ட புனித நீரினை கொண்டு தலை நகரான சோழபுரத்தை உருவாக்கியதால் அது கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அதுவே, அதிக ஆண்டுகள் (சுமார் 240 ஆண்டுகள் ) ஆண்ட சோழர்களின் தலை நகரானது.
8.கங்கை படையெடுப்பின் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னன் ஒரு பெரும் படையினை திரட்டி கொண்டு சோழ தேசம் நோக்கி வருகிறான்.இதனை அறிந்து மகன் ராஜாதி ராஜன் அவர்களுடன் போர் புரிய ஒரு படையுடன் செல்கிறான்.
9.முகமது கஜினி அதி உத்வேகத்துடன் வட இந்தியா நோக்கி படையெடுத்த கால கட்டம் அது.அப்போரில் வட இந்திய மன்னர்கள் ஒரு சேர நின்று கஜினியை தோற்கடித்தனர்.இப் போரில் ராஜேந்திர சோழன் ஒரு பெரும் படையை வட இந்திய மன்னர்களுக்கு நட்புரீதியாக அனுப்பி வைத்தான்.தோற்ற பிறகு முகமது கஜினி சென்ற இடம் வரலாற்று புகழ் பெற்ற சோமநாதபுரம்.
10.பெரும் மனித உழைப்பை கொண்டு,நீர் பாசனத்திற்காக இந்த நாட்டிலே மிகப் பெரிய ஏரியை,25கிமீ நீளமும் 6.5 கிமீ அகலமும் கொண்ட ஏரியை உருவாக்கினான்.இதனை கங்கை கொண்டு புனிதமாக்கப்பட்டதால் இது சோழ கங்கம் எனப்பட்டது.இது இப்பொது மண்ணால் மூடப்பட்டுள்ளது , பொன்னேரி எனப்படுகிறது.
11.ராஜேந்திர சோழன் கட்டிய கோவில்களின் எண்ணிக்கை 32.இதில் கங்கை கொண்ட சோழ புறம், ஈழம்,ஆந்திரா,கர்னாடகா ஆகிய இடங்களில் கட்டிய கோவில்களும் அடங்கும்.
12.வாயுக் கடவுளுக்காக ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள புகழ் வாய்ந்த காளஹஸ்தி திருக்கோயில் இவன் ஆட்சியில்தான் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, முழுவடிவம் பெற்றது.
13.பொன்னியின் செல்வன் படிச்சவங்க எல்லாம் வந்தியத்தேவனை ஒரு கதா பாத்திரமாக நினைத்து வாழ்ந்து இருப்பீங்க.ஆம்,அவன்தான் இவனுடைய ஆட்சியிலும் முதன்மை தளபதியாக விளங்கியவன். தனது அத்தை கணவனே வல்லவராயன் வந்தியத்தேவன்.
14.தனது மகன் ராஜாதிராஜனுக்கு இளம் வயதிலே முடி சூட்டப்பட்டு,தந்தையும் மகனும் 26 ஆண்டுகள் சேர்த்து ஆட்சி புரிந்தனர்.இவனது ஆட்சியில் பின்னாளில் ராஜாதி ராஜனே பல போர்களுக்கு தலைமை புரிந்தான்
.
15.வட இந்தியா,இலங்கை, பாரசீகம், அரேபியம், சீனா,ரோம்,கிழக்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்து இருந்தான்.
.
16.கடார படையெடுப்பினை பற்றி நிலவும் பல கருத்துகளில் ஒன்றாக, அங்கு வாழ்ந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்த தமிழர்களுக்கு விஜய பேரரசால் வந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,தனது செல்வாக்கினை,தனது படை வலிமையை அங்கு காட்டும் பொருட்டு ,தனது படையெடுப்பினை நிகழ்த்தி வெற்றி கொண்டான்.இவன் வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக கம்போடிய மன்னன் தமிழன் சூரிய வர்மன் ராஜேந்திர சோழனின் தாய் பெயரில் கம்போடியாவில் பிரம்மாண்டமான கோவிலை ஏற்படுத்தினான்.
17.ராஜேந்திரன் தன்னை சுற்றி அனைத்து போர் திறன்களும் அறிந்த கடும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒர் போர் குழுவினரை தன்னுடைய நலனுக்கும்,நாட்டின் நலனுக்கும் வைத்து இருந்தான்.
18.கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்த இவனுடைய அரண்மனை மாளிகையின் பரப்பளவு 1.6 கிமீ.
19.மேலைசாளுக்கியர்களிடம் நிலவி வந்த கொடும்பகையினாளு
ம், கீழை சாளுக்கியர் அவர்கள் வசம் செல்லாமல் இருப்பதற்கும் ,சாணக்கிய தனமாக கீழை சாளுக்கியரை தன் வசப்படுத்த தனது மகள் அங்கம்மாளை தனது தமக்கை மகன் கீழை சாளுக்கிய இளவரசன் ராஜ ராஜ அரியனிற்கு திருமணம் செய்து வைத்து ,பின்னாளில் அவனையே மன்னனாக்கி,மேலை சாளுக்கியருக்கு எதிராக மூன்று முறை பெரும் களம் கண்டு பெரும் வெற்றி கண்டான்.
20.அந்தமான் தீவில் மலை உச்சியில் ராஜேந்திரன் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்தால் மேலும் தகவல்கள் கிடைக்கும்.
21.ராஜேந்திர சோழனின் கப்பற்படை திறனை பாராட்டி கவுரவிக்கும் பொருட்டு இந்திய கப்பற்படை பயிற்சி கப்பலுக்கு இந்திய அரசு TS Rajendra என்று பெயர் சூட்டியுள்ளது.
22.என்னதான் இது பொற்கால ஆட்சி என்று சொன்னாலும் குறைகள் இல்லாமல் இல்லை.இவனது ஆட்சியிலும் அடிமை முறை,தேவதாசி முறைகள் பின்பற்ற பட்டது.சாதி கட்டமைப்புகள் இருந்தன,ஆனால் தீண்டாமை இல்லை,வீர பறையர்களுக்கும் நிலங்கள் சரியாக பங்கிட்டு கொடுக்கபட்டது.
23.கிபி 910,முதலாம் பராந்தக சோழன் பெரும் படையும் பாண்டிய மன்னன் இராச சிம்மனின் பெரும் படையும் வெள்ளூர் எனும் இடத்தில் பெரும் போர் புரிந்தனர்.போர் என்றால் அப்படி ஒரு போர்,போரின் முடிவில் சோழன் பெரும் வெற்றி கொள்கின்றான்.பாண்டிய நாட்டை முடி சூட்டி கொள்ள வந்த சோழனுக்கு பெரும் அதிர்ச்சி,பாண்டியன் இராச சிம்மன் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் போரில் உதவிய சிங்கள மன்னனிடம் கொடுத்து விட்டு சேர நாடுக்கு தப்பி ஓடி விட்டான்.கடும் கோபமடைந்த பாராந்தக சோழன் ஒரு பெரும் படயினை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்றான்.ஆனால் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கண்டறிய முடியவில்லை.ஆண்டுகள் கழிந்தன,மன்னர்கள் பலர் வந்து சென்றனர்.ஏன் ராஜராஜ சோழனால் கூட கைப்பற்ற முடியவில்லை.சரி
யாக 107 வருடம் கழித்து இராஜேந்திர சோழன் ஒரு மிகப்பெரும் படையுடன் இலங்கைக்கு சென்று ,முழு இலங்கையையும் துவம்சம் செய்து இலங்கை மன்னன் 5ம் மஹிந்தனை வென்று இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கைப்பற்றி, சோழ நாடு வந்த வேந்தன்தான் இந்த சோழன்.
24.இராஜேந்திர சோழனும் சைவ நெறியையே பின்பற்றினான்.த
ன்னுடைய ஆட்சியில் பிற சமயங்களுக்கும் எள் அளவும் குறையாத அதே முக்கியத்துவம் கொடுத்து வந்தான்.கங்கை முடிய படை எடுத்து வென்றாலும் எந்த நேரத்திலும் தான் சார்ந்த சமயத்தையோ, மொழியையோ யார் மீதும் தினிக்கவே இல்லை.
25.இராஜேந்திரன் இறந்தவுடன்,அவனி
டம் இருந்த தீராத அன்பினால் அவன் மனைவியுள் ஒருத்தியான வீரமா தேவியும் உடன் இறந்தாள்.பின்னா
ளில் அந்த இடத்தில் நீர் பந்தலை அமைத்த அவளின் சகோதரன் சேதுராமன் மதுராந்தகன் அவ்வழியில் செல்வோர்க்கு நீர்,மோரினை கொடுத்து வந்தான்.
எப்படிப்பட்ட சாம்ராஜ்யத்தை நிறுவிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்!.
நம் வீர வரலாற்றை நம் சந்ததிகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
நம் வாழ்வில் மீண்டும் தமிழகத்தை மாற்றி அமைப்போம். இராஜராஜசோழன்மற்றும் அவர் மகன் இரஜேந்நிர சோளனையும் தமிழ் மக்கள் எப்போதும் நினைவுகூருவதோடு மணிமண்டபங்கள கட்டவேண்டும்.
#Thanks to mr ponni ravi sir.....

3 comments

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives