"கஜா' புயலுக்கு நிதி திரட்ட, அமெரிக்காவில், மீண்டும் மொய் விருந்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2018

"கஜா' புயலுக்கு நிதி திரட்ட, அமெரிக்காவில், மீண்டும் மொய் விருந்து



'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட, அமெரிக்காவில், இரண்டாவது முறையாக, மொய் விருந்து நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 'கஜா' புயலால், டெல்டா மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.ரூ.3.5 லட்சம் வசூல்தென்னை உள்ளிட்ட பல ஆண்டுகள் வளர்த்து, வருவாய் அளித்து வந்த மரங்களை இழந்து, விவசாய குடும்பங்கள் வேதனையில் வாடுகின்றன.அவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், கடந்த வாரம், வடக்கு கரோலினா பகுதியில் மொய் விருந்து நடத்தினர்.

இதில், இந்திய மதிப்பில், 3.50 லட்சம் ரூபாய் வசூலானது. அதை புதுக்கோட்டை மாவட்டத்தில், சூரிய ஒளி மின்சாரத்தில், தெருவிளக்குகள் அமைக்க வழங்கினர்.இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணம், டல்லஸ் நகரில் வாழும் தமிழர்கள் ஆதரவுடன், தமிழ் மலரும் மையம் எனும் தமிழ் பள்ளி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் உதவியுடன், மற்றொரு மொய் விருந்து நடந்தது.இதில், 250க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களில் இருந்து, 700 நபர்கள் பங்கேற்றனர்.

இதில், 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் - இந்திய மதிப்பில், 14லட்சம் ரூபாய் வசூலானது.இந்த நிதி, கஜா புயலால், வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தென்னை, பலா, எலுமிச்சை கன்றுகளை வழங்கவும், வீடுகளை முற்றிலும் இழந்த நபர்களுக்கு வீடு கட்டவும், வழங்கப்பட உள்ளது.மொய் விருந்து ஏற்பாடுகளை செய்த ஜெய் நடேசன், கீதாசுரேஷ், பிரவீணா வரதராஜன்,ஆசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:130 குடும்பங்கள்மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்காக, 130 குடும்பங்கள்சேர்ந்து, தனித்தனியே சமைத்து, தலைவாழை இலையிட்டு, தரையில் அமர வைத்து, பாரம்பரிய தமிழ் முறைப்படி விருந்தளிக்கப் பட்டது.ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்காக, நாங்கள் இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம்.

இந்த நிதி மூலம் ஒரு கிராமத்தில்உள்ள பல குடும்பங்கள் பயனடையும் என்பதை விட, இதை பார்த்து, ஒவ்வொரு நகர மக்களும், தன்னார்வ அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஒரு கிராமத்தை மீட்கவும், உதவவும் முன்வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி