இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2018

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஜவ்வாது மலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் வனக்கோட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள வனத்துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜவ்வாது மலையில்தங்கி மாணவா்களுக்கு கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அதைப் பூா்த்தி செய்து மாவட்ட வன அலுவலா், திருப்பத்தூா் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூா் - 635601 வேலூா் மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோஅல்லது நேரிலோ வரும் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு முடித்தவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

13 comments:

  1. வேலுர் மாவட்டம் ஆசிரியர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியுமா

    ReplyDelete
  2. Is D. Ted, compulsory?
    I am B. SC, B. Ed, Tet passed ,belongs to vellore district. Can I apply for this job?

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர்க்கு D.T.Ed கண்டிப்பா இருக்கனும். Paper 1 TNTET pass panni irukkanum

      Delete
  3. Vellore candidate mattuma or other district apply pannalama reply pls

    ReplyDelete
  4. BA BED MUDICHURUKEN WITH TET PASS NAN APPLY PANALAMA REPLY PLEASE

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர்க்கு D.T.Ed கண்டிப்பா இருக்கனும். Paper 1 TNTET pass panni irukkanum

      Delete
  5. Only paper 1 pass
    Notification SG ONLY

    ReplyDelete
  6. திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாமா?

    ReplyDelete
  7. Namakkal candidates apply Pannalama? Pls reply

    ReplyDelete
  8. எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.போக்குவரத்து வசதிகள் அற்ற மலைக்கிராமங்களில் தங்கி பணியாற்றும் விருப்பம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பகுதிகளில் தங்கி பணியாற்ற முடியாமல் பணியை விட்டவர்கள் பலர் உள்ளனர்.வனத்துறையில் பணி வாய்ப்பு பெற்றால் இறுதி வரை அங்கு மட்டுமே பணியாற்ற இயலும்.வேறு அரசுப் பள்ளிகளுக்கு பணிமாற்றம் பெற இயலாது.அடிப்படை வசதிகள் குறைவான பகுதிகள் இப்பள்ளிகள்.

    ReplyDelete
  9. திருப்பத்தூரில் தங்கி தினமும் பல கிலோமீட்டர் கடுமையான பாதைகளில் பயணித்து பள்ளிகளுக்குச் செல்லலாம்.மற்றபடி அரசு ஊதியம்,மற்ற அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.அந்த மலையிலேயே உள்ளவர்களுக்கு மட்டிமே வசதியாக இருக்கும்.என் பெற்றோர் இங்கு தான் பணியாற்றி ஓய்வு பெற்றனர்.அவர்கள் பணியால் பிள்ளைகளாகிய எங்கள் படிப்புகள் பாதிக்கப்பட்டன.வெளியுலகத் தொடர்புகளற்ற மலைப்பகுதியால் திறமைமிக்க எங்களின் கல்வி பாதிக்கப்பட்டது.எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எண்ணம் கொண்டவர்கள் நன்கு விசாரித்து,பள்ளி அமைந்துள்ள பகுதிகளை நேரில் பார்த்தபின் முடிவெடுங்கள்.ஒரு முறை வனத்துறைக்குள் சென்றுவிட்டால் வெளியேற இயலாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி