ஆசிரியர் சங்கத்துடன் இன்று பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2018

ஆசிரியர் சங்கத்துடன் இன்று பேச்சு


ஊதிய உயர்வு கோரி போராட்டம் அறிவித்துள்ள, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், செங்கோட்டையன், இன்று பேச்சு நடத்துகிறார்.

'ஊதியத்தை உயர்த்தாவிட்டால், போராட்டம் நிச்சயம்' என, ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர், தங்களுக்கு அடிப்படை ஊதியத்தில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, 2009ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில், ஜூனில் பணி ஆணை பெற்றவர்களுக்கு, அதே ஆண்டு மே மாதம் பணி ஆணை பெற்றவர்களை விட, அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர், ராபர்ட் தலைமையில், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், நேற்று முன்தினம், குடும்பத்தினருடன் சென்னை வந்தனர். அவர்கள், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதற்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.அதேநேரம், சங்க நிர்வாகிகளுடன் பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பேச்சு நடத்தினார். இரவு வரை பேச்சு நடத்தியும், சமரசம் ஏற்படவில்லை. இன்று, அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், பேச்சு நடத்தப்பட உள்ளது. பேச்சு முடியும் வரை, ஆசிரியர்கள் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.

ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை, இன்று வெளியிடாவிட்டால், குடும்பத்தினருடன், டி.பி.ஐ., வளாகத்தில்,தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, சங்கத்தின் பொதுச் செயலர், ராபர்ட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி