தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லை; உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2018

தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லை; உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.


2017-ம் ஆண்டு 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கான அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த எஸ்.மலர்விழி உள்பட 15 தேர்வில் முறைகேடு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பணி எழுத்து தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில் சேர்க்கவில்லை என்றும், தன்னை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் உடற்கல்வி ஆசிரியராக தேர்வாகியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

தான் படித்த பி.பி.இ. படிப்பு, பி.பி.இ.எஸ். படிப்புக்கு இணை என்று அரசு விதி உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணையே முற்றிலும் முறையாக பின்பற்றப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

20 comments:

  1. oho....
    Odi mudicha piragu kodu pota epadi?
    adHan winner yarune theriyala!
    aatam cancel....

    ReplyDelete
  2. இந்த தீர்ப்பு முற்றிலும் தவறானது . அரசு இது குறித்து மேல் முறையீடு செல்லும்.பல ஆண்டுகளாக நாங்கள் படித்து விட்டு காத்திருக்றோம்.தகுந்த மதிப்பெண் பேற்றிருக்கிறோம்.தனி நபர்களின் நியாத்திற்காக மற்ற அனைவரின் வாழ்கையையும் நீதிமன்றம் சூறையாடுகிறது.நீதிமன்றங்கள் தற்போது பல வேடிக்கையான தீர்புகளை வழங்கிவருவது வருத்தம் அளிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. Yes...தனிநபர்களின் நியாயமான கேள்விகளின் பதில்தான்.....நீதிமன்றம் கூறியது.....TRB only reason for all problems... TRB is unqualified to recruit the candidates becoz TRB's past history is too bad...

      Delete
  3. TRB இது குறித்து தகுந்த விளக்கம் அளிக்கவேண்டும்.தேர்வானவர்கள் அனைவரும் தகுதியானவர்களே என சான்றழிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. It is not
      தகுதி தேர்வு....
      இது போட்டி தேர்வு...
      First clear about that..

      Delete
  4. ஆரம்பத்திலே நீ உன் படிப்பு தேர்வு செய்யாமல் இருந்தால் அந்த தனிநபரில் நீயும் ஒருவன் Stupid

    ReplyDelete
  5. தயவுசெய்து கல்வி துறையில் குறுக்கு வழியை பின்பற்றும் நாய்களை தண்டிக்க முன் வாருங்கள். நீதிமன்றம் எந்த தகவலும் அதன் ஆதாரம் இல்லாமல் வெளியிடாது. நீதிமன்றத்தை குறை கூறுவதை நிறுத்தி விட்டு தவறானவர்களை அடையாளம் காண முன் வாருங்கள். கடின உழைப்பு வீனாகாது.முயற்சியற்று போகாது.

    ReplyDelete
  6. Trb exam and court case. Students life 100 years waste.

    ReplyDelete
  7. How to select pet. Reexam or any other way please say

    ReplyDelete
  8. If TRB gave clear draft notification to media....from that may got without problem ...becoz this is first special teacher exam for trb..many chairman and member secretary has transferred past two years....so...trb will analyse all four subject category eligibility criteria and get back same list fir final selection ......at least hereafter .....

    ReplyDelete
  9. If TRB gave clear draft notification to media....from that may got without problem ...becoz this is first special teacher exam for trb..many chairman and member secretary has transferred past two years....so...trb will analyse all four subject category eligibility criteria and get back same list fir final selection ......at least hereafter .....

    ReplyDelete
  10. ippadiye Elland examum cancel pandrathuku ethuku exam cellaring a? exam n application feesnu enga kitta kollai adikkava

    ReplyDelete
  11. உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிறப்ப பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது அன்றேள்ளாம் கொதிக்காதவர்கள் இன்று திறமையானவர்கள் வாய்ப்பு பெறும்போழுது அவர்களை எட்டி உதைக்க மட்டும் தனியாக முளைத்து வருகிறார்கள்.நான் 2000 bpes batch அண்ணாமலை பல்கலைகழகம் நான் தேர்வு செய்யபட்டிருக்கிறேன் .2012 cped karnataka ,வில் படித்துவிட்டு பணிவேண்டும் என்று கூட்டம் கூடிவிட்டது.

    ReplyDelete
  12. நீதிமன்றங்கள் எப்போது பல்கலைகழகங்களை நடத்த ஆரம்பித்து என்று தெரியவில்லை. அறிவிப்பாணை தவறு என்று கூறும் அளவிற்கு புத்திசாலிகள் அங்கே இருக்கிறார்கள்.TRB போர்டை மூடிவிட்டு நீதி மன்றத்திடம் ஒப்படைத்துவிட்டால் சிறப்பாக நடத்துவார்கள். மாற்றான் பொண்டாடியை காதலிப்பது தவறல்ல அதுவும் காதலே.

    ReplyDelete
  13. கல்வித்தகுதியை தீர்மானிப்பது TRB யின் வேலை.TRB யின் முடிவே இறுதியானது.இது போட்டித்தேர்வே தவிர தகுதி தேர்வு அல்ல.நான் தேர்வு செய்யபடாமல் இருந்திருந்தால் அன்றே படிக்க ஆறம்பித்திருப்பேன். நீதிக்காக காத்திருக்கிறேன் நீதின்றத்தில் அல்ல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி