பாதுகாப்பற்ற பள்ளி பட்டியலுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2018

பாதுகாப்பற்ற பள்ளி பட்டியலுக்கு உத்தரவு


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பாதுகாப்பற்ற கட்டடங்களின் எண்ணிக்கை குறித்து, தகவல் சேகரித்து அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், 36 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி கட்டடங்களை, பொதுப்பணி மற்றும் வட்டார வளர்ச்சி துறையினர் பராமரிக்கின்றனர். மழைக்காலம் துவங்கும் போதெல்லாம், 'பாதுகாப்பற்ற கட்டடங்களில், மாணவர்களை தங்க வைக்கக் கூடாது' என,உத்தரவிடப்படுகிறது.போதிய இடவசதி இல்லாததால், பலபள்ளிகள், இதை பின்பற்ற இயலாத நிலை தொடர்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுக்க, பாதுகாப்பற்ற தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித் துறை இயக்குனர் கருப்பசாமியிடம் கேட்ட போது, ''பாதுகாப்பற்ற கட்டடங்களை கணக்கெடுத்து, அப்பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். பட்டியல் திரட்டும் பணிகள் நடக்கின்றன,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி