பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை தற்காலிகமாக நியமிக்க உத்தரவு : அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2018

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை தற்காலிகமாக நியமிக்க உத்தரவு : அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு


''மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினோம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளோம்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் உபரியாக உள்ள, 4,000 ஆசிரியர்களை, மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள, 5,472 இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம். புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு, வழக்குகள் தடையாக உள்ளன. வழக்குகளை முடித்து, டி.ஆர்.பி., வழியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படிக்கும், 26 ஆயிரம் மாணவர்களுக்கு, 413 மையங்களில், 'நீட்' தேர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. கடந்த, 2017 - 18ம் கல்வி ஆண்டில், 3,192 மாணவர்களுக்கு, தனியார் நிறுவனமும், தனியார் கல்லுாரிகளும் செலவு செய்து, நீட் பயிற்சியை இலவசமாக வழங்கின. அரசு, ஒரு காசு கூட செலவு செய்யவில்லை.தமிழகத்தில், 33 அரசு பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை; 1,334 பள்ளிகளில், ஒன்பதுக்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.

 எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அறிக்கை விடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இதுபோன்ற அரசு பள்ளிகளை நடத்த ஆலோசனை அளித்தால், ஏற்க தயாராக உள்ளோம்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

23 comments:

  1. மாணவ மாணவி குறைவதற்கு யார் காரணம் ...

    ReplyDelete
    Replies
    1. Rendu reason teachers illathathum sariyana teachers illathathum than main reason

      Delete
    2. Rendu reason teachers illathathum sariyana teachers illathathum than main reason

      Delete
  2. நாம் நல்ல முறையில் பணி செய்தாலும் செய்யாவிட்டாலும் நம் ஆசிரியர் பணிக்கான பணம் நமக்கு வாராமல் போவதில்லை என்று எண்ணும் சில ஆசிரியர்கள் எண்ணத்தால்தான் மாணவர்கள் படிப்பு,மனநிலை மிக மோசமாக் மாறிவிடுகிறது.தான் பணியாற்றும் அறிவு திருக்கோவிலை (வகுப்பறையை)சில ஆசிரியர்கள் ஜவுளி கடையாக மாற்றுகின்றனர்.பல்வேறு ஆசிரியர்கள் தன் வாழ்க்கையை உயர்த்திய இந்த அரசு பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பதே எனது ஆசிரியர் பணிக்கு நான் செய்யும் புனித தன்மை என வாழ்கின்றனர். இவர்கள் வழியே அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகரிக்க முதல் படிப்பாகும்.


    ReplyDelete
    Replies
    1. Daily one statement... But nothing happening in govt schools.... Lot of schools are running without teachers... That's are the main reason for students fall

      Delete
  3. Ena puna Ku temporary tet eligible staffs a permanent a appoint pana ena

    ReplyDelete
  4. Please give me temporary job for paper1 pass candidates

    ReplyDelete
  5. DEO Preliminary and main original question paper ( 2014 ) available
    preliminary gk material also available
    9884678645

    ReplyDelete
    Replies
    1. Aspirants sir deo main exam question paper venum ...enna pannanum.....???

      Delete
  6. Evagala transfer paisa vagetu kodupaga
    Evagala teacher vanuma temporary yadupaga....nala nadakam
    Panam sambatheka vali....

    ReplyDelete
  7. Tet 2013 groups member pls conduct your phone no

    ReplyDelete
  8. தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு செய்ததை திரும்ப பெற்று அத்த மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்க்கவேண்டும்.

    ReplyDelete
  9. புதிய தனியார் பள்ளிகளை காசு வாங்கிகொண்டு அனுமதிக்ககூடாது

    ReplyDelete
  10. அனைத்து அரசு பணியாளர்களும் ஆட்சியாளர்களும் தங்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்க்க வேண்டும்

    ReplyDelete
  11. ministers avanga veetu childrena govt schoola join Pannale pothum automatically
    1. teachers nalla teach pannuvanga.
    2. toilets and school environment cleana irukkum
    3. to increase students no. in govt school, the govt should not give permission to open new schools
    4. private schools oda numbera kuraikkalam. for example one management kila one school than run pannanum and with limited admissions.
    5. school childrenku ethuku tab? education departmentla Vera entha selavum illaya. schoolso oda infrastructurea develop pannunga sir.
    intha mathiri innum evvalavo irukku seiya. atha vittutu daily summa summary Mike munnadi ninnu etho pesa vendiyathu. ithula opposite party kitta suggestion Vera ketkaringa. then ungalukku ethuku itha post? thandama salary Vera?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி