அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு : தேவகோட்டையில் மீண்டும் சர்ச்சை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2018

அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு : தேவகோட்டையில் மீண்டும் சர்ச்சை


தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவங்கும் நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பள்ளி பூட்டை உடைத்து வினாத்தாளை சிலர் திருடி சென்றனர்.

அரையாண்டுத் தேர்வு டிச.,22 வரை நடக்கிறது. இதற்கான வினாத்தாள்கள் நேற்றுமுன்தினம் ஒருங்கிணைப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. தேவகோட்டையில் 26 பள்ளிக்குரிய வினாத்தாள் என்.எஸ்.எம்.வி.பி.எஸ்., பள்ளியில் வைக்கப்பட்டன. நேற்று காலை பணியாளர்கள் பள்ளிக்கு வந்தனர்.

அப்போது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல்தாள், பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், பிளஸ் 1 ஆங்கிலம், பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், கணினிஅறிவியல், வணிகவியல் வினாத்தாள்கள்திருடப்பட்டிருந்தன. தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் புகாரில் ஜெயச்சந்திரன் எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., ஜாகிராம், டி.எஸ்.பி., கார்த்தி கேயன், மாவட்ட கல்வி அலுவலர் சாமிசத்திய மூர்த்தி விசாரித்தனர். கடந்த மாதம் இரண்டாம் பருவத்தேர்வு வினாத்தாள்களும் தேவகோட்டையில் வெளியாகின. 'உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி