நலத்துறை பள்ளிகள் இணைப்பு: செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2018

நலத்துறை பள்ளிகள் இணைப்பு: செங்கோட்டையன்


''நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:அரசு தேர்வுத்துறை, சென்னையை தலைமையிடமாக கொண்டு, ஏழு மண்டலங்களில் மட்டும் செயல்பட்டு வந்தது.

தற்போது, மாணவர்கள், தனித்தேர்வர்கள் நலன் கருதி, தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும், உதவி இயக்குனர் தலைமையில், அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட உள்ளது. இந்த அலுவலகத்தில், உதவி இயக்குனர் தலைமையில், 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நலத்துறையின் சார்பில், ஆதிதிராவிடர், கள்ளர், பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனவே,நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி களை, பள்ளிக் கல்வித்துறையுடன்இணைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு செய்து, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி