சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கக்கோரி அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கக்கோரி அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம்


சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகத்தில், நாடார் சமூகம் பற்றிய, சர்ச்சைக்குரிய தகவல் இடம் பெற்று உள்ளதை கண்டித்தும், அதை நீக்க வலியுறுத்தியும், நாடார் அமைப்புகள், நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யை கண்டித்து, நாடார் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.போராட்டத்தை, காங்., மூத்த தலைவர் குமரி அனந்தன் துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும்திரைத்துறையினர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்புக்கான, சமூக அறிவியல் பாடத்தில், நாடார் சமூகம் பற்றிய, தவறான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவாகிஉள்ளன. இதை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், வழக்குகள் தொடுத்தும், சர்ச்சைக்குஉரிய பகுதியை நீக்க, மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.மற்ற துறைகளில் தவறு நடந்தால், அதை, அதிகாரிகள் வாயிலாக, சரி செய்து விடலாம். கல்வித் துறையில் தவறு நடந்தால், ஒட்டு மொத்த மாணவர்களும் பாதிக்கப்படுவர்.

 இந்த சர்ச்சைக்குரிய மற்றும் தவறான பாடத்தால், நாயர் மற்றும் நாடார் சமூக மாணவர்கள் இடையே மோதல் உருவாக வாய்ப்புள்ளது. அதனால், அந்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி