சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2018

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு


சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் நிடி ஆயோக் அமைப்பு, புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் 75 என்ற தலைப்பில் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பை, 27 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், சிவில் தேர்வுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் எதுவும், பரிசீலனையில் இல்லை என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வில் வயது உச்ச வரம்பை குறைப்பது தொடர்பான பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி