'அனைத்து பள்ளி வகுப்பறைகளும் ஜனவரி இறுதிக்குள் கம்ப்யூட்டர் மயம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2018

'அனைத்து பள்ளி வகுப்பறைகளும் ஜனவரி இறுதிக்குள் கம்ப்யூட்டர் மயம்'


ஜனவரி மாத இறுதிக்குள், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்து வகுப்பறைகளும், கம்ப்யூட்டர் மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும்'', என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கூகலூர் காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 442 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் விலையில்லா சைக்கிள்களை நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

        ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, அடுத்தாண்டு தனியாரை மிஞ்சும் அளவுக்கு, வண்ண சீருடைகளாக மாற்றி அமைக்கப்படும். ஒன்பது முதல், பிளஸ் 2 வரையுள்ள அனைத்து வகுப்பறைகளும், ஜனவரி மாத இறுதிக்குள் கம்ப்யூட்டர் மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

3 comments:

  1. But no fill it computer vaccuncy

    ReplyDelete
  2. கண்களுக்கு கெடுதல் ஐயா.

    ReplyDelete
  3. கம்ப்யூட்டர் மயம் அப்படி என்னா சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி