பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2018

பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை


பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்துபகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துஉள்ள மனு:

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2012 மார்ச்சில், உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரத்து, 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டும் பணிபுரிகின்றனர். பணியில் சேர்ந்த போது, 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகளில், 2,700 ரூபாய் மட்டும் தான், ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படாததால், பகுதி நேர ஆசிரியர்கள், பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.வரும் சட்டசபை கூட்டத் தொடரில், பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை, வெளியிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது

1 comment:

  1. இவங்க இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால், இன்னும்10 ஆண்டு பகுதி நேர ஆசிரியர்கள் நிலை இப்படியே தான் இருக்கும். மாற்றம் மட்டுமே உங்கள் நிலை மாறும் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி