Science Fact - சிலந்தி, தான் பின்னும் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2018

Science Fact - சிலந்தி, தான் பின்னும் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி ?



சிலந்திப் பூச்சியின் பின்புறம், மெல்லிழைகளை உருவாக்கும் மூன்று உறுப்புகளைக் கொண்ட தொகுதி ஒன்று உள்ளது; இதன் மூலம் இழைகளை உற்பத்தி செய்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்கும் வலையை சிலந்தி உருவாக்குகிறது.

பூச்சிகள் பறக்கும்போது இவ்வலையில் தட்டுப்பட்டால், அவற்றின் பறக்கும் செயல் தடைபடுகிறது; அவ்வாறு தடைபட்டவுடனே வலையில் இருக்கும் சிலந்தி முட்டிமோதி தன் நச்சுக் கொடுக்குகளைப் பயன்படுத்தி அப்பூச்சிகளைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளுகிறது. பூச்சிகளுக்கோ, வலையில் மோதி தமது பறக்கும் செயல் தடைபட்டவுடனே, ஏதும் தோன்றாமல் திகைப்படைந்து, சிலந்தி விரித்த வலையில் எளிதாகச் சிக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் சிலந்தி தான் பின்னிய வலையின் பரப்பு முழுவதையும் நன்கு அறிந்திருப்பதால், அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளுகிறது. சில சிலந்திகள் கோந்து போன்ற திரவத்தை வெளியிடுவதால், பறக்கும் பூச்சிகள் அதில் எளிதாக ஒட்டிக் கொள்ளுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி