TRB - சிறப்பாசிரியர்கள் நியமனம் குளறுபடி பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2018

TRB - சிறப்பாசிரியர்கள் நியமனம் குளறுபடி பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!

28 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஏமாற்று வித்தைகள் பெறப்பட்ட 300 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக உள்ள நிலையில் சம்பந்தமில்லாமல் விளக்கம் அளித்துள்ளனர்.நீதி மன்றம் மூலமாக பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்களுக்கு பட்டியலில் இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேர்வு வாரியத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்வு எழுதியவர்கள் கருத்து.

    ReplyDelete
  2. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்.இதுவரை பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் மூலம் 300 ற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓரிரு மனுக்களுக்கு மட்டுமே அழுகின்ற குழந்தைக்கு வாழைப்பழம் காட்டுவது போல் தன்னுடைய தவறுகளை மறைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முனைந்துள்ளது.. இந்த செயல்பாடு சிறப்பாசிரியர்களளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிரப்பாசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட அழைப்பு கடிதத்தில் ஓவிய ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதியில் Free hand out line model drawing என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லாத நிலையில் அதுவும் தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ் வழி சான்றிதழ் வாங்கி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள ப்படும் என்று சுட்டிக் காட்ட ப்படாத நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு குரிப்பானையில் கூட எந்த இடத்திலும் higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெறப்பட்ட வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டப் படாத நிலையில் இன்று தகுதி வாய்ந்த தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியை சுட்டிக்காடிட்யுள்ள நிலையில் அதற்கு தகுந்த பதிலை அளிக்க முன்வரவில்லை. மேலும் இனசுழற்சியும் முறையாக பின்பற்றப்படவில்லை தகுதிவாய்ந்த தேர்வர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் பட்சத்தில் (RESERED) என்று 189 தேர்வர்களை நீதிமன்றங்களுக்கு அலைய விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அவலங்களை ஊடகங்கள் தோலுரித்து காட்டியுள்ள நிலையில் இரண்டு மாத காலம் கழித்து இப்போது மலுப்பலான ஒரு விளக்கத்தை தயாரித்து அளித்திருப்பது தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.மேலும் நிரப்பப் படாத நிலையில் உள்ள அனைத்தையும் அடுத்த நிலையில் மதிப்பெண் பெற்று பட்டியலில் இடம்பெறாமல் நிறுத்தி வைத்துள்ள தேர்வர்கள் நலன்கருதி அவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக இறுதி பட்டியல் வெளியீடு செய்த பின்னர் தான் பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  3. 20% தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கு, ஒருவர் உரிமை கோருவாரேயானால் அவர் தனது முழு கல்வித்தகுதியையும் தமிழ்வழியில் பெற்றிருக்க வேண்டும் என்பதே விதி. அதை குறிப்பாணையில் தனியே குறிப்பிட வேண்டும் என்பதில் அவசியம் இல்லை. இப்போது விளக்கம் தெரிய வேண்டிய ஒன்று என்னவென்றால் higher gradeக்கு தமிழ்வழி உண்டா இல்லையா என்பதே. தமிழ்வழிச் சான்றிதழ் பெற்றவர்கள் எதாவது illegal ஆக பெற்றிருந்தால் மட்டுமே இது நீதிமன்றத்தில் எடுபடும்.

    எனவே குறிப்பாணையில் குறிப்பிட்டு காட்டப்படவில்லை என்ற வாதம் தவறானது.

    ReplyDelete
    Replies
    1. தனித் தேர்வர்களாக தேர்வு எழுதி free hand outline model drawing higher greade என்ற சான்றிதழ் பெற்ற தேர்வர்கள் யாரிடம் சென்று தமிழ் வழி சான்றிதழ் பெற முடியும்.அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி இதற்கான தமிழ் வழி சான்றிதழ் தேர்வு துறை இயக்கத்தால் வழங் குவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஒருவர் தமிழ் வழி சான்றிதழ் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தமிழ் வழி சான்றிதழ் பெற்று சமர்பிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே தேர்ச்சி பட்டியலில் கொண்டு வர ஆசிரியர் தேர்வு வாரியம் முயன்றுள்ளது என்றுதானே கருத முடிகிறது. இதை தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தால் தகுதிவாய்ந்த தேர்வர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் போலியான தமிழ் வழி சான்றிதழ் எல்லோராலும் கொடுத்திருக்க முடியும்.சான்றிதழ் சரி பார்ப்பின்போது யாரிடமும் higher grade சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் கேட்கவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை சிந்தித்க வேண்டிய கருத்து.

      Delete
  4. உண்மையை உடனுக்குடன் உலகறியச் செய்யும் கல்விச் செய்தி ஊடகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தவறா? இல்லை சரியான புரிதல் இல்லாததன் விளைவா? எது ஆனாலும் பாஸ் செய்து இறதிப்பட்டியலில் பெயர் வந்த (தமிழ்வழி பிரச்சனை அல்லாத) தேர்வருக்குத் தான் பாதிப்பு. எத்தனை காலம் தான் பணிக்காகக் காத்திருப்பாரோ தெரியவில்லை.
    எந்த தேர்வானாலும் பாதிக்கப்படுவது அரசோ தேர்வு வாரியமோ பட்டியலில் பெயர் வராதவர்களோ அல்ல. பட்டியலில் பெயர் வராதோர் செய்யும் சண்டையில், தேர்வுவாரியம் காக்கும் அமைதியில் ஒழுங்காகப் படித்து தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று, சுயநலவாதிகள் என்ற பெயரும் வாங்கிக் கொண்டு அமைதியாய் இருக்கும் அந்த நல்லவர்களுக்கு மட்டுமே பாதிப்பு. இந்தப் பிரச்சனை ஓயவே இன்னும் ஆறு மாதம் ஆகும். அடுத்து வேறு பிரச்சனைகளோடு சலர் களம் காண புறப்படுவர். ஒன்றரை ஆண்டுகளாக வரும் வரும் என எதிர்பார்த்து.!!!!

    ReplyDelete
  6. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்....

    ReplyDelete
  7. PET notification தவறு என்று Court கூறியிருக்கே அப்படினா....

    ReplyDelete
  8. இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது.

    ReplyDelete
  9. 2004,2008,2010,2012 ம் ஆண்டுகளில் C.P.Ed/D.P.Ed முடித்தவர்களை அரசு நியமனம் செய்துள்ளதே NCRT,NCTE G.O முறைபடிதானா ?

    ReplyDelete

  10. *💢✍ TRB சிறப்பாசிரியர் தேர்வு OMR விடைத்தாள்களை SCAN செய்ததில் முறைகேடு??*

    *👉CM CELL Reply - Dt:13/12/18*

    ♨https://kaninikkalvi.blogspot.com/2018/12/trb-omr-scan-cm-cell-reply-dt131218.html?m=1

    ⭕More News - kaninikkalvi.blogspot.com/8807414648

    Just type kaninikkalvi from Google

    Reply செய்யும் நண்பர்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. Elcot நிறுவனம் மூலம் மீண்டும் ஒருமுறை scan செய்யப்பட்டுள்ளது என்ற பதிலில் எங்கய்யா முறைகேடு. உங்களுடைய TRP (view count) பைத்தியத்தில் எங்களையும் பதைபதைக்க வைத்து. உங்களை ஒழித்தால் நாடு உருப்படும்

      Delete
  11. அப்படியானால் சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்கு போட்டி தேர்வு நடத்தியது இது போல் காலம் கடத்துவதுதான் இந்த ஆட்சி யாளர்களின் எண்ணமா? முறையாக சிரப்பாசிரியர்களை வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்தால் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டிய சூழ்நிலையை மாற்றவே இந்த தேர்வு முறையை புகுத்தி படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான சிரப்பாசிரியர்கள் தங்களின் வயது 58 கடந்த நிலையில் தற்போது தாங்கள் பயின்ற கல்வித் தகுதியை தூக்கி எறிந்து விட்டு இருப்பது நியாயமாகுமா? இதனை இந்த அரசு சீர் தூக்கிப் பார்க் வேண்டாமா? சிறப்பாசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அய்யா ராமதாஸ் வலியுறுத்தினார்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போட்டித்தேர்வுதான் என்று கொண்டு வந்து அதை முறையாக நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்க வக்கில்லாத இந்த அரசு எல்லா துறைகளிலும் ஊழலின் ஊற்றுக்கண்னாக திகழ்ந்து வருகிறது.ஆசிரியர் போட்டி தேர்வு நடத்தும் தகுதி இனி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இல்லை என்பதை உணர முடிகிறது.இதை ஆரம்பத்திலேயே தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தி இருக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் சிரப்பாசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் முறையான தகுதிவாய்ந்த நபர்களுக்கு பணி நியமனம் வழங்க இந்த அரசும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களாலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வேலையில்லா சிரப்பாசிரியர்களின் பணிவானவேண்டுகோளாகும்.எங்களுக்கு முன்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு சட்டம் அதே தகுதியுடன் காத்திருப்பவர்களுக்கு ஒரு சட்டமா தயவுசெய்து பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete
  12. ஐயா. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வாய்ப்பளிக்கும் போது தகுதியானவர் யார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? தேர்வின் மூலம் ஆட்களைத் தேர்வு செய்தால் மட்டுமே யார் தான் படித்ததில் வல்லவராக இருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு, கட்ஆப் மதிப்பெண் எல்லாம் அதற்குத் தான். 12ம் வகுப்பு முடித்தவுடன் அல்வலகத்தில் பதிவு செய்துவிட்டு வரிசையாக உங்களுக்கு மருத்துவ சீட்டு தந்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? அங்கே தகுதியானவர்க்கு மருத்துவம் கிடைக்கிறது. அதைப்போலத் தான் இதுவும். தேர்வு வைப்பது சரியே. ஆனால் முறையாக சரியாக IAS தேர்வு போல் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  13. போட்டி தேர்வின் அவல நிலை எந்த அளவில் உள்ளது என்று எண்ணி பார்க்க வேண்டும் .எல்லாம் ஊழல் மயம். ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தேர்வு வாரியத்திற்கு பின் விளைவுகளை அறியும் திறன் இல்லையா? ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு சரியில்லை என்று குறிப்பிட்டு பட்டியலை நீக்கம் செய்து நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இதுதான் போட்டி தேர்வு நடத்தும் லட்சணமா இது வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி முதல் பட்டாதாரி ஆசிரியர் பணி வரை சிறப்பாசிரியர் பணியிலும் இதே நிலைதான் போட்டி தேர்வு நடத்தும் தகுதி ஆசிரியர் தேர்வு வாரியம் இழந்துவிட்டதையே இன்றைய சூழ்நிலை உணர்த்துகிறது.இந்த நிலை மாறவேண்டும் எதிலும் நேர்மையில்லை.

    ReplyDelete
  14. வெளிப்படைத்தன்மை இல்லை அறிவிப்பு குரிப்பானையில் குளறுபடிகள் என்று குற்றச்சாட்டு நீண்டு கொண்டே போகிறது என்பதை தெள்ளத்தளிவாக அறிய முடிகிறது குறிப்பாக ஒரு வரைமுறை பின்பற்றப்படவில்லை free hand out line model drawing மட்டுமே முடித்திருந்தவர்களுக்கும் தேர்வு எழுத ஏன் அனுமதித்து விட்டு தற்போது மதிப்பெண் பெற்ற நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு ஏன்மறுக்கப்படுகிறது.போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. U people have to understand few things. They wont scrutinize u at the application level. They will allow u to write the exam, if u claim that u r having every qualification. At the certification level only they r able to verify ur genuineness abt the qualifications u r having. So, it's not their mistake.

      Delete
    2. *certificate verification level

      Delete
  15. இன்றைய சூழ்நிலையில் மக்கள் தெளிவாக உள்ளார்கள்.ஒவ்வொறு பணி நியமனங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதிகளை பொருத்து ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவு படுத்த வில்லை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானை முறையாக இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பதில் என்ன? அதேபோல் ஓவிய ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியில் வரையற்ற ஓவியமும் மாதிரி ஓவியமும் என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று ஏன் தன்னுடைய அறிவிப்பு குரிப்பானையில் காட்டப்பட வில்லை.மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் குறிப்பாக தமிழ்வழி இட ஒதுக்கீடுகள் கோறுபவர்கள் free hand out line model drawing என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏன் குறிப்பிட்டு காட்டப் பட வில்லை.மற்ற சான்றிதழ் களை வரிசைப்படுத்தி கேட்கும்போது இதை மட்டும் குறிப்பிடாமல் தற்போது அதை காரணம் காட்டி தெரிவு பட்டியல் தயாரித்து வெளியிடட்டது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மிகப்பெரிய முறைகேடு அதுவும் அரசுக்கு சம்மந்தமில்லாத தனியார் பயிற்சி நிறுவனம் நடத்திவரும் ஒருசில நபர்களிடம் போலியாக சான்றிதழ் பெற்று சமர்பித்த சான்றிதழ் களை வாங்கி கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி பட்டியல் தயாரித்து வெளியிடட்டது எப்படி ஏற்ப்புடையதாக அமையும்.தனித்தேர்வர்களாக free hand out line model drawing முடித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பதில் என்ன?

    ReplyDelete
  16. When will be release pg trb notification frds

    ReplyDelete
    Replies
    1. பாராளுமன்றம் தேர்தலுக்கு பிறகு அடுத்த கல்வியாண்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்களாம்

      Delete
  17. Try தன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது....
    2016-17 கணினி அறிவியல் ஆசிரியர்நியமனத்தில் இதோபோல் பல பித்தலாட்ட வேலைகள் செய்து வெறும் 7,500 சம்பளத்தில் தற்காலிகபணியாக பணியமர்த்தியதுமட்டும் அல்ல தற்போது ஏற்கனவே pta மூலம் சொற்ப்ப வருமானத்தைப் பெற்றுவருகின்றன என்று கூறப்படுகிறஇடத்திதையும் சேர்த்து 814 தற்காலிக பணிஇடங்ககளாக காட்டி வருமாவளத்தை பெருக்கிக்கொள்(ளை)வதைவிடுத்து கொஞ்சமாவது நேர்மையான முறையில் employment seniority மூலம் போட்டாலாவது அடுத்த தேர்தலிஒருசில இடங்களில் வர இந்த நல்லது செய்ய வேண்டும்...

    ReplyDelete
  18. ஆசிரியர்கள் பலரும் கொடுத்த மனுக்களில்
    அவர்கள் குறுக்கு வழியை மறைக்க பதில் அளிக்கும் சில மனுக்களுக்கு மட்டும் பல மாத காலம் காத்திருந்து சிறந்த முறையில் ஏமாற்றுவோருக்கு நன்றி. முதலில் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் பயிற்சியே பெறாதவர்களை தேர்வு எழுத வைத்து அவர்களுக்கு உதவி செய்த கெட்ட உள்ளங்களுக்கு நன்றி. அனைத்து தகவல்களையும் மறைப்பதே குற்ற உணர்வுகளின் நிலைபாடாகும்.இன்னும் தகுதி இல்லாதோர்க்கு தமிழ் வழி சான்றிதழ் எனும் முறையை கொண்டு போராடும் அனைத்து சந்தர்ப்பவாதிகளுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயம் ஒரு நாள் வாய்மையே வெல்லும்.




    ReplyDelete
    Replies
    1. சரியான பதிவு உண்மை நிலையை உணர்த்தி யுள்ளார்.

      Delete
  19. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள தவறுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் தற்போது நிலவி வரும் பல்வேறுவிதமான குளறுபடிகளை தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு தீர்வு காண முன் வரவேண்டும் விரைந்து காலம் கடத்தாமல் தீர்வு காண வேண்டும்.இல்லாவிட்டால் பழைய நடைமுறைபடி பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.எந்த ஒரு தீர்வும் காணாமல் காலம் தாழ்த்தி வருவது மிகவும் மோசமான செயல்பாடாகும்.வருடக்கணக்காக பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாத பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தற்போது நிலவி வரும் முக்கிய பிரச்சினையாக சிரப்பாசிரியர் பணி நியமன சிக்கல்களை தீர்க்க முடியாத நிலையில் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகி விடுவதே நல்லது. தினமும் காலையில் வெறும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.எந்த ஒரு செயல்பாடும் கிடையாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி