Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

17 A , 17 B - என்றால் என்ன? JACTTO - GEO விளக்கம்!


17 B வருது ஓடுங்க பணிக்கு 17 B வருது பணிக்கு ஓடு என்று உன் தலைமை ஆசிரியர் பயமுறுத்துகிறா ?
 அடிப்படை விதியே தெரியாத என் தோழா தெரிந்து கொள் ..
நீ பணிக்கு வராமல் தகவல் தெரிவிக்காமல் எங்கே போனாய் ? என்று விளக்கம் கேட்பதே 17 A..
 இதற்கு விளக்கத்தை 17 A பெற்ற 15 நாட்களுக்குள் விளக்கம் தந்தால் போதும்.
நீங்கள் கொடுத்த விளக்கம் ஏற்புடையது இல்லை என்றால் மீண்டும் 17 A. இது போல் மூன்று முறை 17 A தரலாம்.
 அதன் பிறகு உன்னை ஏன் பணி இடைநீக்கம் செய்யக் கூடாது என்று கேள்வி கேட்பதே 17 B.
அந்த 17 B க்கும் உங்கள் பதில் திருப்தி இல்லை எனில் மட்டுமே பணி இடைநீக்கம். அதுவும் அரைசம்பளத்துடன் .
 பாலியல் குற்றசாட்டு, பண மோசடி, கொலை குற்றம் இன்னும் பிற குற்றங்களுக்கு மட்டுமே உடனடி பணி இடைநீக்கம்..
நீ மேற்கண்ட என்ன குற்றத்தை செய்தாய் ?
 பணி இடைநீக்கம் ஆவதற்கு ?
17 B, 17 A என்று பயமுறுத்தும் உன் தலைமைக்கே இது தெரியுமா? என்று கேள்.

 தைரியமாக போராடு
உன்னுடன் JACTTO_GEO ...
 இதில் மாற்று சட்டகருத்து இருந்தால் கருத்தை பதிவிடுக.

13 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  ReplyDelete
 3. நல்ல வழி காட்டிகள்.

  ReplyDelete
 4. நேரடியாக 17பி கொடுக்கக்பட்டுள்ளதே... இப்போது

  ReplyDelete
 5. பகுதி நேரம் தொகுப்பூதியம் என்ற வார்த்தைகள் வேலை நியமன தடை சட்டம் என்ற இளைஞர்களின் படித்தவர்களின் வாழ்க்கையை கெடுக்கக் கூடிய விஷயங்கள் எல்லாமே இவர்களின் ஆட்சியில் மட்டுமே நடைபெறும். 7000, 7700 சம்பளம் வாங்கி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஆயிரக்கணக்கானோர் நொந்து போய் உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று இப்போது பணி இடங்களை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். போராட வேண்டிய இளைஞர்கள் அமைதியாக கூட இல்லாமல் போராடுபவர்களுக்கு எதிராக கருத்து கூறுகிறார்கள். டேட் தேர்வு தேர்ச்சி பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் போஸ்டிங்??????? அதுவும் ஏழு ஆண்டுகள் முடிந்து விடும். திரும்பவும் போட்டி போட முடியமா? யார் கேட்பது? இப்படி தவறு செய்யும் அரசியல் வியாதிகளை விட்டுட்டீங்க. Namakkhaga yeppo poraadugiraargal intha இளைஞர்கள்

  ReplyDelete
  Replies
  1. இளைஞர்களுக்காக நீங்க எப்ப போராடுனீங்க. ஆசிரியர் என்று சான்றிதழ் பெற்ற பின்னும் தகுதித்தேர்வு எழுதச் சொல்றத கேக்க துப்பில்லாதவங்க எதுக்கு இளைஞர்களை பற்றி பேசனும்.

   Delete
 6. ஆசிரியர் & அரசு ஊழியர் போராட்டம் ஏன்? நண்பர்களே இப்போராட்டம் சம்பள உயர்வுக்கானது என்பதே தவறான புரிதல். இது எங்களின் அடிப்படை உரிமை பற்றியதாகும் ...நோக்கம் : 1 வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து அளிக்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியம் தற்போதைய கொள்ளையர்களால் புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் பறிக்கப்பட்டது.புதிய பென்ஷன் என்றால் என்ன? எங்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து மாநில அரசு மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அப்பணத்தை ஊழியர் ஓய்வு பெறும் போது மொத்த தொகையில் 40% ரொக்கமாகவும் மீதி 60% பங்குசந்தையில் முதலீடு செய்து அதில் வரும் இலாபத்தை ஓய்வு ஊதியமாக அளிக்க வேண்டும். நிலையில்லாத பங்குச்சந்தையில் வயதான காலத்தில் எங்களின் பணத்தை பங்குச்சந்தையிலும் எங்கள் வயிற்றில் மண்ணை போடுவது நியாயம் தானா? சரிபோகட்டும் பிடித்தம் செய்த பணத்தை மாநில அரசு மத்திய அரசிடம் செலுத்தியதா என்றால் அதுவும் இல்லை.தற்செயலாக இறந்த ஊழியர்கள் குடும்த்தினர். பிடித்தம் செய்த பணத்தில் ஒரு ரூபாயும் வாங்க வழியில்லை.காரணம் எங்கள் பணம் அரசு ஏப்பம் விட்டுவிட்டதே ஆகும். சேமிப்பாக செலுத்திய தொகையை வாங்க வழியில்லை என்றால்? நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்ம இருப்பீர்களா...எனவே எங்கள் பணத்திற்கு பாதுகாப்பு பழைய பென்ஷன் திட்டமே எனவே அதை வலியுறுத்துகிறோம். மேலும் அரசுபள்ளிகள் சீரழிய அரசே காரணம். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அரசுபள்ளிகளில் பலகட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் உள்ளனர்.ஆனால் மாணவர்கள்? போக்கிரி போல செயல்படுகின்றனர்.ஆசிரியரை கண்டு மாணவன் அஞ்சிய காலம் போய் மாணவனை கண்டு ஆசிரியர் அஞ்சவேண்டிய நிலைக்கு யார் காரணம்? கண்டிக்க கூடாது, தண்டிக்ககூடாது. என்றால் மாணவனை எவ்வாறு சீர்படுத்துவது நீங்கள் செல்லலாம்.அன்பாக என்று அது சில நேரம், சில மாணவர்களுக்கு பொருந்தும்.என் பிள்ளைகளை ஒரு அரசுபள்ளியில் சேர்ப்பதற்க்கு தயார்.ஆனால் அவன் ஒழுக்கமான சூழலுக்கு யார் பொறுப்பு ஒரே சட்டம் அரசுஊதியம் பெறும்MP,MLA, கலெக்டர் உட்பட அனைவரின் பிள்ளைகளும் அரசுபள்ளியில் பயில வேண்டும் என்று சும்மா அல்ல நியாயமான கட்டணத்துடன்.இந்த சட்டம் கொண்டுவர உங்க முதல்வருக்கு தில்லு இருந்த சொல்லு(உங்கள் M.P MLA-க்கள் மட்டும் பழைய பென்ஷன் பெறுகின்றனனர்) வியாபாரியோ கடைசி வியாபாரி. ஆனால் எங்களுக்கு 58 வயதிற்க்கு பின் வசந்தபவன் ஒட்டலிலும் வேலை தரமாட்டான்.உங்கள் வரிபணம் என்றீர்கள்.அரசியல்வாதிகளை விடவும், வியாபாரிகளைவிடவும் நேர்மையாக அரசிற்கு வரிசெலுத்தும் ஒரே இனம் அது ஆசிரிய&அரசுஊழிய இனமே.இவற்றை எல்லாம் பாமரமக்களுக்கு விளக்க வேண்டிய நிலையில் நாங்கள் ..காரணம் அரசும், மீடியாவும் எங்கள் கோரிக்கையை தவறாக சம்பள உயர்வு கேட்கின்றனர் என சித்தரிக்கின்றன. இப்பதிவில் தவறு இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே.

  ReplyDelete
 7. *புரிதலற்ற பதிவுகளால் அரசு ஊழியர் போராட்டத்தை கொச்சைப் படுத்துபவர்களுக்கு*

  தமிழனைப் பொறுத்தவரை திடீர் சம்பவ கொந்தளிப்பாளராகவே வாழ்கிறான்

  அரசு ஊழியன் என்பவன் பணியாளன் அவ்வளவே நாட்டில் நடக்குற அத்துணை அநீதிகளுக்கும் அவனே காரணமல்ல

  வரும்போது ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு?
  அவன தூக்குங்க ஆயிரம்பேரு இருக்கானு பொங்குறவன்
  ஒன்னு வேல கெடக்காதவனா இருப்பான்
  இல்ல
  வேலைக்கு லாயக்கு இல்லாதவனா இருப்பான்.
  இல்ல
  அடுத்தவன் ஆக்கி வச்ச சோற நோகாம திங்க வாய ரெடிபன்னி வச்சவனா இருப்பான்?

  இன்று அவர்கள் பெறுகிற 5 இலக்க ஊதியம்
  அப்பாயின்மெண்ட் ஆர்டர் அடிச்சதுமே வாங்குனது இல்ல

  பத்து பதினைந்து வருட உழைப்பின் பலன் so கொச்சயான வார்த்தைகள் வேணாம்.

  அதோடு நில்லாது அவர்களின் நியாயமான ஊதிய முரண் ஊதிய உயர்வு சம வேலை சம ஊதியம்
  இறுதியாக நாளதுவரை வாழ்வாதாரமாக நினைத்து வரும் ஓய்வூதியம்

  இதை முன் வைத்தே போராட்டம்

  இந்த கோரிக்கைகளோடு போராட்டம் தொடங்கியது 2017ல்
  இன்று 2019 செய்றேன் செய்றன்னு சொம்படிச்சி கரிபூசுன அரசின் ஏமாற்று வேலைக்கு அவர்கள் எடுத்துள்ள இறுதி ஆயுதம் இப்போராட்டம்.

  Cps எனும் திட்டத்தில் வசூல் செய்த 35000 கோடிக்கு அரசிடம் இதுவரை முறையான கணக்கில்லை

  சில சொட்டபஞ்சாயத்து போன்ற அமைப்புகளும் திடீர் ஞானோதய புரட்சியாளர்களும் அரசு ஊழியரை ஆசிரியரை கொச்சைப்படுத்துகின்றனர்.

  அரசு கல்வி மருத்துவம் இவைகளை இலவசமாக தரனும் தனியார்மயம் இருக்க கூடாதுனு வரிகட்ற பொதுஜனம் ஏன் இன்னுங்கூட சிந்திக்கல??
  தனியார்பள்ளிய மூட ஒன்றாக சேர்ந்து போராடலாமே?

  ஒரு எம்எல்ஏ எலெக்சன்ல நின்னார்.
  ரிடல்ட் வர்ரதுக்குள்ள அவருடைய உடல் நிலை பாதிக்கப்படுகிறது. ரிசல்ட்டு வருது அவரு ஜெய்க்கிறார். ஆனா அவர் உயிரோட இல்ல. ஆனா ஜெய்ச்ச ஒரே காரணத்துக்காக அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியம்...
  ஆனா 20 வருசம் வேலபாக்குற வாத்தியார் சாக்பீஸ் கரையோட கம்முனு போயிரனும் அதானே?

  நீதியரசர் எம்எல்ஏ னு எல்லாரும் 21 மாத ஊதிய நிலுவைய ரொக்கமா வாங்குனாங்க
  ஒத்த பைசா வாங்காம அதாவனு அவங்களுக்கு போட்ட பட்ட நாமத்த எதிர்த்து போராடுனா
  வரிபணம் வீண் ?
  என்னே ஒரு சிந்தை..

  களைகள் நிறைய இருக்கு அதை அறிவால் களையுங்கள் பொதுமக்களே

  லஞ்சம் வாங்குறவன செருப்பால அடி
  சட்டைய புடிச்சி உலுக்கு
  ஒருங்கா வேலபாக்குலனா படம்புடிச்சி உலகத்துக்கு காட்டு

  அத விட்டுட்டு அவன் வேலய நீ வாங்க ஆசப்படாத..

  போராட்டமின்றி விடுதலை கூட கிடைத்ததில்லை

  இதுவே உங்கள் அக்கறை மிகுந்த அய்யத்திற்கு விடை


  *வெல்வோம் இணைந்து*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 8. Pension kekurathu correct ... Ippa pension naraya vanguranga so government kodukamudila... Atha mathi fixed pension kodukanum... avunga basic needs Ku oru family la husband and wife rendu perum pension Na 50% koraikalam pension la... 4000rs 5000rs pension lam athigam. So fixed pension better solution...

  ReplyDelete
  Replies
  1. வயதான காலத்தில் மருத்துவ செலவுகள் இருக்கும் அதற்கும் சாப்பிட வேண்டாமா இது என்ன அறியாமை.....
   புரிதல் அற்ற நிலையில் சமூக சிந்தனை செல்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

   Delete
 9. 17 A என்பது ஓர் அரசு ஊழியர் தகவல் தெரிவிக்காமல் பணிக்கு ஏன் வரவில்லை என்று கேட்பது
  17 B என்பது கொலைக்குற்றம், அரசு பணம் கையாடல், இருதார மணம், மதுபோதையில் பணிக்கு வருதல், பாலியல் குற்றம், போன்ற நிகழ்வுகளில் விளக்கம் கேட்பது.
  போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது எப்படி 17 B தரமுடியும் என்றுதான் விளங்கவில்லை...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives